»   »  தெரியாத முகங்கள்.. சுவாரஸ்யமற்ற டாஸ்க்குகள்... படுத்தே விட்டது பிக் பாஸ்!

தெரியாத முகங்கள்.. சுவாரஸ்யமற்ற டாஸ்க்குகள்... படுத்தே விட்டது பிக் பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிக் பாஸ் வீட்டிலிருந்து ஓவியா வெளியேறியதுமே பல பார்வையாளர்கள் மீண்டும் சீரியல்கள் பக்கம் ரிமோட்டைத் தட்டிவிட்டனர். 'ஓவியா நிச்சயம் திரும்ப வருவார்' என்ற எதிர்ப்பார்ப்போடு கொஞ்சம் பேர் நிகழ்ச்சியைப் பார்த்து வந்தனர்.

ஆனால் ஓவியா மீண்டும் வரவில்லை. வரும் அறிகுறியும் தெரியவில்லை. மாறாக புதிய பங்கேற்பாளர்களாக சுஜா, ஹாரி, காஜல் போன்றோர் உள்ளே வந்துள்ளனர்.

Big Boss loses its viewers

இவர்களில் சுஜாவையாவது ஓரளவு பார்வையாளர்களுக்குத் தெரியும். ஆனால் ஹாரி, காஜல் அவ்வளவாக பரிச்சயமில்லாதவர்கள். இந்த மூவரின் வருகைக்குப் பிறகும் பெரிய வீட்டில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. சினேகன், வையாபுரி இருவர் மட்டும்தான் இப்போது அதிக வெறுப்பைச் சம்பாதிக்காதவர்களாக உள்ளனர்.

கிட்டத்தட்ட காயத்ரிக்கு ஒரு ஜூலி மாதிரி ஆகிவிட்டார் ஆரவ். இந்த வாரம் காயத்ரி வெளியேறிவிடுவார் என்று தெரிகிறது.

பிக்பாஸ் தரும் டாஸ்க்குகளும் படு மொக்கையாக உள்ளன. கிட்டத்தட்ட படுத்தே விட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி என்பதுதான் வெள்ளிக்கிழமை நிலவரம்.

கமல் ஹாஸன் இன்று வந்த பிறகுதான் நிகழ்ச்சி மீண்டும் களைகட்டுமா.. களை இழக்குமா என்பது தெரியும்.

English summary
After Oviya's eviction, three new comers have steeped in Big Boss house, but the programme failed to attract viewrs.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil