»   »  'போங்க பாஸ்... நீங்களும் உங்க டாஸ்க்கும்... செம போர்!'

'போங்க பாஸ்... நீங்களும் உங்க டாஸ்க்கும்... செம போர்!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஓவியா இல்லாதது எவ்வளவு பெரிய நஷ்டம் என்று பிக் பாஸை உணர வைத்துவிட்டன கடந்த மூன்று நாள் பெரிய வீட்டு நிகழ்வுகள். டாஸ்க் என்ற பெயரில் பிக் பாஸ் தரும் வேலைகளும் ரசிக்கிற மாதிரி இல்லாததால், 'ஃபாஸ்ட் ஃபார்வர்டு' பண்ணும் வசதி இல்லையே என பார்வையாளர்களை நினைக்க வைத்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய சுவாரஸ்யமே ஓவியாவின் இயல்பான நடவடிக்கைகள்தான். அத்தனை அழுகுணிகளுக்கும் நடுவில் ஓவியா மட்டும் இயல்பாக தனித்து நின்றதால் அவரை அத்தனைப் பேரும் ரசித்தனர். சமயத்தில் பிக் பாஸின் உத்தரவுகளுக்கே 'முடியாது' என்று சொல்லிவிட்டு அசால்டாக நின்றார் ஓவியா.

ஓஓஓவியா

ஓஓஓவியா

ஆனால் காயத்ரி, ஆரவ், சக்தி, நமீதா, ஜூலி போன்றவர்கள் ஓவியாவைத் தனிமைப்படுத்தினர். அவரை தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். இதனால் மன அழுத்தம் தாங்காமல் வெளியேறிவிட்டார் ஓவியா.

இப்போது ஓவியா வெளியேறி நான்கு நாட்கள் ஆகிவிட்டன. இதில் இரண்டு நாட்கள் அவரைப் பற்றியே ஆளாளுக்கு பேசிக் கொண்டிருந்ததால் ஓரளவு பெரிய வீட்டைக் கவனித்தனர்.

காயத்ரி சீன்

காயத்ரி சீன்

ஆனால் திங்கள், செவ்வாய் இரு தினங்களுமே பார்க்க அங்கே ஒன்றுமே இல்லை. குறிப்பாக திங்கள்கிழமை அன்று கமலுக்கு எதிராக காயத்ரி போட்ட சீன் மிச்ச மீதியிருந்த பார்வையாளர்களையும் விரட்டிவிட்டது.

இது என்ன டாஸ்க் பாஸ்?

இது என்ன டாஸ்க் பாஸ்?

செவ்வாய்க்கிழமை துணி துவைக்கிற டாஸ்க். இதில் பெரிய சுவாரஸ்யம் என எதுவுமே இல்லை. காயத்ரியையெல்லாம் பார்த்தாலே பத்திக்கிட்டு வருது என சமூக வலைத்தளங்களில் திட்டித் தீர்த்தார்கள். பி வாசு மகன் சக்தி வெளியில் வந்தால் பாதுகாப்பாக வீட்டுக்குப் போக முடியுமா தெரியவில்லை. அத்தனை வெறுப்பைச் சம்பாதித்துள்ளார் இந்த பிக் பாஸ் மூலம்.

சினேகன் பரவால்ல

சினேகன் பரவால்ல

சினேகன் பரவாயில்லை. கட்டிப்புடி வைத்தியம் ஒன்றைத் தவிர, வேறு எந்த வகையிலும் இப்போது எரிச்சலூட்டும்படி நடந்து கொள்ளவில்லை. ஒரிஜினல் லாண்டரிக்காரர் மாதிரியே நேற்று வேலை செய்தார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

பிக்பாஸுக்கு இப்போது ரசிகர்களின் வேண்டுகோளெல்லாம், 'இந்த மூஞ்சிகளைப் பார்க்கவே கடுப்பா இருக்கு... தயவு செய்து சக்தி, காயத்ரி, ஆரவ் ஆகிய மூவரையும் ஒரே நாளில் வெளியேத்திட்டு புது பிரபலங்களை அனுப்புங்க' என்பதுதான்.

English summary
Post Oviya eviction, Big Boss event became very boring
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil