»   »  கண்ணாமூச்சி ஆடும் பிக் பாஸ்: சுஜாவுக்காக கண் கலங்கிய ஆரவ்

கண்ணாமூச்சி ஆடும் பிக் பாஸ்: சுஜாவுக்காக கண் கலங்கிய ஆரவ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுஜா வருணியை ஒளித்து வைத்து போட்டியாளர்களுடன் கண்ணாமூச்சி ஆடி வருகிறார் பிக் பாஸ்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஹரிஷ், பிந்து மாதவி, சுஜா வருணி ஆகியோரில் ஒருவர் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த வாரம் யாரும் எலிமினேட் ஆகவில்லை.

மாறாக வந்த விருந்தாளிகளான சக்தி, ஆர்த்தி, ஜூலி ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சுஜா வருணி

சுஜா வருணி

சுஜா வருணி எலிமினேட் செய்யப்படுகிறார் என்று கமல் ஹாஸன் தெரிவித்தார். அனைவரும் ப்ரீஸ் நிலையில் இருக்க சுஜா அவர்களிடம் சென்று நான் போறேன் என்றார்.

அழுகை

அழுகை

நிஜமாகவே வெளியே போகிறோம் என்று நினைத்து சுஜா அழுதார். ஆனால் பிக் பாஸோ அவரை வெளியே அனுப்பாமல் ரகசிய அறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

சுஜா ரகசிய அறையில் தனியாக இருப்பார். பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை அவரால் பார்க்க முடியும், அவர்கள் பேசுவதை கேட்க முடியும். ஆனால் அவர் இருப்பது யாருக்கும் தெரியாது. அவர் விரைவில் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்படுவார்.

ஆரவ்

ஆரவ்

ஓவியா கிளம்பியபோது அழாமல் தைரியமாக இருந்தார் ஆரவ். ஆனால் சுஜா வருணி கிளம்பியதை பார்த்ததும் ஆரவ் கண் கலங்கினார். உடனே சுஜா ஆரவை பார்த்து அழக்கூடாது என்று கூறி கண்ணீரை துடைத்துவிட்டார்.

பிந்து மாதவி

பிந்து மாதவி

தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் 6 பேர் மட்டுமே உள்ளனர். பிந்து மாதவி மட்டுமே பெண் போட்டியாளர். ஒரே நாளில் 4 பேர் வெளியேறியதை போட்டியாளர்களால் நம்ப முடியவில்லை.

English summary
Big Boss is playing hide and seek with the contestants by keeping Suja Varunee in a secret room in the house. According to the contestants, Suja is eliminated.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil