»   »  பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ஓவியா... தொடர்ந்து தங்க வைக்க பேச்சுவார்த்தை!

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ஓவியா... தொடர்ந்து தங்க வைக்க பேச்சுவார்த்தை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார் நடிகை ஓவியா. இப்போது மன அழுத்தம் காரணமாக அவரை வெளியில் கொண்டு வந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்துள்ளனர் நிகழ்ச்சி நடத்துபவர்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முழுக்க ஸ்க்ரிப்ட் எழுதி நடத்தப்படும் பெரிய நாடகம் என்றாலும், அதில் ஓவியாவின் இயல்பு மாறாத குணம் அனைவரையும் கவர்ந்துவிட்டது. அவரது வெகுளித்தனம், அழகு, யாருக்கும் பயப்படாதது, தவறு என்று தெரிந்ததும் மன்னிப்புக் கேட்கும் குணம், சுலபத்தில் ஒருவரை நம்புவது போன்ற தன்மைகள் மக்களை வெகுவாகக் கவர்ந்துவிட்டன.

ஓவியாவுக்குதான் ஆதரவு

ஓவியாவுக்குதான் ஆதரவு

தமிழகத்தில் இன்றைய தேதிக்கு எந்த நடிகைக்கும் இல்லாத அளவு ரசிகர்கள் ஓவியாவுக்கு மட்டுமே உள்ளனர் என்றால் மிகையல்ல. ஓவியாவை டார்ச்சர் செய்த காயத்ரி, நமீதா, ஜூலி, ஆரவ், சக்தி போன்றவர்களை கடுமையாக வெறுக்கிறார்கள் பார்வையாளர்கள். இவர்களில் யார் வெளியேறினாலும் பட்டாசு கொளுத்தி மகிழ்வார்கள் போலிருக்கிறது.

இனி அந்த வீட்டிலிருக்க முடியாது

இனி அந்த வீட்டிலிருக்க முடியாது

ஆனால் இப்போது ஓவியாவால் அந்த வீட்டில் தொடர்ந்து இருக்க முடியவில்லை. காதல் தோல்வியும் சக பங்கேற்பாளர்களின் இம்சையும் அவரை வெளியேற்றிவிடும் போலிருக்கிறது.

ஒருத்தரும் பார்க்க மாட்டார்

ஒருத்தரும் பார்க்க மாட்டார்

ஆனால் ஓவியா வெளியேறினால், பிக் பாஸ் வீட்டை ஒருவரும் எட்டிக் கூடப் பார்க்க மாட்டார்கள். அது சேனல் நிர்வாகத்துக்கும் தெரிந்துள்ளது. இன்று கமலுடன் ஓவியாவை பேச வைக்கிறார்கள்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

அதே நேரம், ஓவியாவை எப்படியாவது வீட்டுக்குள்ளேயே இருக்க வைக்க வேண்டும் என்று நிகழ்ச்சி நடத்தும் என்டமோல் நிறுவனம் விரும்புகிறது. இதற்காக அவருடன் நட்சத்திர ஹோட்டலில் பேச்சுவார்த்தை நடத்துகிறதாம்.

English summary
The producers of Big Boss have trying to peacify participant Oviya to stay few more days in the house

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X