Just In
- 15 min ago
தோத்துட்டேன் மச்சான்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போனில் உரையாடிய சோமசேகர்.. வைரலாகும் வீடியோ!
- 27 min ago
பேண்டை கழட்டி 'அதை' காட்டினார்.. பிரபல இயக்குநர் மீது யுனிவர்சிட்டி பட நடிகை பகீர் புகார்!
- 1 hr ago
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்.. பதிலுக்கு நன்றி சொன்ன ஆரி!
- 2 hrs ago
மீண்டும் இணைந்த கவின் லாஸ்லியா.. பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் சந்திப்பு.. தீயாய் பரவும் போட்டோஸ்!
Don't Miss!
- News
அமெரிக்க வரலாற்றிலேயே... வயதான அதிபர்... விசித்திர சாதனையைப் படைக்கும் ஜோ பைடன்
- Lifestyle
இந்த டீ நீங்க தூங்கும்போதுகூட உங்க கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுமாம்...!
- Sports
டெஸ்ட் தரவரிசை.... 4வது இடத்துக்கு இறங்கிய கேப்டன்... முதல் 50 இடங்களில் 8 இந்திய வீரர்கள்!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Automobiles
வால்வோ எஸ்60 சொகுசு காருக்கு ஆன்லைனில் புக்கிங் துவங்கியது... முதலில் வருவோருக்கு சகாய விலை!
- Finance
தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள்.. நீங்கள் எவ்வளவு வரி செலுத்துகிறீர்கள் தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக்பாஸ் வீட்டிற்குள் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் சேரன் இருக்கிறார் - பேரரசு
சென்னை: இயக்குநர் சேரனை யாரும் வலுக்கட்டாயமாக பிக் பாஸ் வீட்டிற்குள் அடைத்து வைக்கவில்லை. அவரின் சூழ்நிலை தெரியாமல் விமர்சிப்பது தவறு என்று இயக்குநர் பேரரசு, அமீருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களில் தற்போது ட்ரெண்டிங் ஆக உள்ள நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3தான். இப்போட்டியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் நம் தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர் சேரன்.

இவரின் அனைத்து படைப்புகளும் மிகவும் சிறந்த படங்கள். தமிழ் திரையுலகில் தரமான இயக்குனர் என பெயர் பெற்றவர். சில படங்கள் சரியான வசூலை பெறாத காரணத்தால் நஷ்டம் அடைந்ததால் கடனாளி ஆகிவிட்டார். அந்த சூழ்நிலையில் தான் அவருக்கு இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு கொள்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
அந்த போட்டியின் அனைத்து விதிமுறைகளையும் ஒத்துக்கொண்டு கையெழுத்திட்ட பின்பு தான் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். தற்போது பல போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில் சிறப்பாக போட்டியில் தொடர்ந்து பங்குபெற்று வருகிறார் இயக்குனர் சேரன்.
பல பிரச்சனைகளை பிக் பாஸ் வீட்டிற்குள் அவர் சந்தித்து வந்தார். குறிப்பாக சில வாரங்களுக்கு முன்னர் மீரா மிதுன் எனும் சக போட்டியாளரால் வீண் பழிக்கு ஆளானார். அதனால் அவர் மிகவும் துன்பப்பட்டார். அப்போது அவர் தனது மகள்களின் எதிர்காலத்திற்காவே இந்த போட்டியில் அவர் கலந்து கொண்டதாக மிகவும் வருத்தப்பட்டு பேசினார்.

அவர் மீது போடப்பட்ட வீண் பழி நிரூபிக்கப்பட்டபின் மன அமைதி பெற்றார். போட்டியாளர்களும் போட்டி கடுமையாகவே இருப்பினும் சிறப்பாக ஆடி வருகிறார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான், என்ற படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் அமீர் கலந்து கொண்டு பேசினார். எனக்கு பிக் பாஸ் நிகழிச்சி பார்ப்பது பிடிக்காது. இருப்பினும் இயக்குனர் சேரன் மீது கொண்டுள்ள மரியாதையில் அவர் சம்பத்தப்பட்ட காட்சிகளை மட்டும் பார்ப்பேன் என்றார்.
அந்த நிகழ்ச்சியால் சமுதாயம் எந்த ஒரு பயனையும் அடையப்போவதில்லை என்றார். அப்போது பிக் பாஸ் வீட்டில் சேரன் படும் அவமானங்கள் மற்றும் துன்பங்களை நினைத்து மனம் மிகவும் வேதனைப்படுவதாகவும் வருத்தம் தெரிவித்தார். ஆவேசத்துடன் பிக் பாஸ் வீட்டின் கதவை உடைத்து சேரனை வெளியே கொண்டு வந்து விடவேண்டும் என்பது போல் உள்ளது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். எவ்வளவு மரியாதைக்குரிய இயக்குனர், அவருக்கு இதெல்லாம் தேவையா என்றார்.
சிவகாசி, திருப்பாச்சி, பழனி போன்ற மசாலா படங்களை இயக்கி அறியப்படுபவர் இயக்குனர் பேரரசு. இவர் இயக்குனர் அமீரின் சேரன் குறித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இயக்குனர் சேரன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து விதிமுறைகளையும் ஒத்து கொண்ட பிறகே பிக் பாஸ் வீட்டிற்குள் தனது சம்மதத்துடன் தான் நுழைந்துள்ளார்.
அவரை யாரும் வலுக்கட்டாயமாக உள்ளே அடைக்கவில்லை. அப்படி இருக்கையில் இயக்குனர் அமீர் எப்படி அவரை பற்றி விமர்சிக்கலாம். அவரின் சூழ்நிலை முழுமையாக தெரியாமல் அவரை விமர்சிப்பது சரியல்ல. அவரின் பொருளாதார நெருக்கடியை இயக்குனர் அமீர் ஏற்று கொள்வாரா என கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த செய்தி இப்போது வைரலாகி பரவி வருகிறது.
இருப்பினும் சேரனின் தன்னம்பிக்கையை பாராட்டுக்குரியது. 16 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருக்கின்றனர். இப்போட்டியில் இறுதி வரை சேரன் நிலைப்பார, பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளராக வருவாரா.
இதன் மூலம் அவரது பொருளாதார நெருக்கடி தீருமா, என்பது இந்த போட்டியின் முடிவில் தெரியவரும். இருப்பினும் அவருடைய பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்து மறுபடியும் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த தரமான படத்தை வெளியிடுவார் என எதிர்பார்ப்போம்.