Don't Miss!
- News
"வரி குறைப்பு வரவேற்க கூடியதுதான்.." பட்ஜெட் குறித்து எம்.பி கார்த்தி சிதம்பரம் கருத்து
- Sports
"இன்னும் ஒரே ஒரு போட்டிதான்.. சுப்மன் கில்லால் இந்தியாவுக்கு ஆபத்து".. பாக். சீனியர் எச்சரிக்கை!
- Finance
பட்ஜெட் 2023: உங்க சம்பளத்துக்கு வரிச் சேமிப்பு எவ்வளவு..? புட்டு புட்டு வைக்கும் தகவல்..!
- Lifestyle
தாய்மார்களே! உங்க குழந்தைக்கு பாலோடு இந்த பழங்களை சேர்த்து சாப்பிட கொடுக்கவே கூடாதாம்..ஏன் தெரியுமா?
- Automobiles
சிஎம் பேரனா இருந்தாலும் தப்பிக்க முடியாது! இத்தன லட்சம் கார்களை அழிக்க போறாங்களா! திடீர் அதிரடியால் கலக்கம்!
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரச்சிதா போட்ட பதிவு.. என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 6வது சீசனில் நடைபோட்டு வருகிறது.
இந்த சீசன் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் முக்கியமான போட்டியாளராக இருந்த ரச்சிதா நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகியுள்ளார்.
நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ள ரச்சிதா தற்போது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார்.
சத்தமே இல்லாமல் சண்டையை மூட்டிவிட்ட பிக்பாஸ்..ஏடிகேக்கு கட்டம் சரியில்லை போல..நெட்டிசன்ஸ் கிண்டல்!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி நிகழ்ச்சியாக பிக்பாஸ் இருந்து வருகிறது. கடந்த 2017ல் துவங்கிய இதன் பயணம் 5 சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசனில் நடைபோட்டு வருகிறது. 20 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் பயணம் தற்போது 3 மாதங்களை கடந்து நிறைவு கட்டத்தை அடைந்துள்ளது.

அமைதியான போட்டியாளர் ரச்சிதா
இந்த நிகழ்ச்சியில் துவக்கம் முதலே அமைதியான போட்டியாளராக சேஃப் கேம் ஆடி வந்தார் ரச்சிதா. அமைதியாக இருந்தபோதிலும் பரபரப்பாக தன்னுடைய விளையாட்டை வெளிப்படுத்தி வந்தார் ரச்சிதா. அமைதியாக இருந்த அவர் கடந்த வாரத்தில்தான் அசீமுடன் சண்டை என தன்னை வெளிக்காட்டத் துவங்கினார். இன்னிலையில் கடந்த வாரத்தில் குறைவான வாக்குகளை பெற்று அவர் எலிமினேட் ஆகியுள்ளார்.

ரசிகர்கள் சோகம்
மற்ற போட்டியாளர்கள் போல மற்றவர்களை சீண்டாமல் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தி ஆடிவந்த ரச்சிதா ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக வலம் வந்த நிலையில் தற்போது அவரது எலிமினேஷன் அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பதிலாக சரியாக விளையாடாத மற்ற போட்டியாளர்களை எலிமினேட் செய்திருக்கலாம் என்று அவர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ரச்சிதா வாங்கிய சம்பளம்
கடந்த 8 வாரங்களாக பிக்பாஸ் வீட்டில் இருந்த ரச்சிதாவிற்கு ஒரு நாளைக்கு 28 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் மொத்தமாக அவருக்கு 25 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது கூறப்பட்டுள்ளது. இதனிடையே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ள ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்ட் செய்துள்ளார்.

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரச்சிதா
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தொடர்ந்து ஆதரவு அளித்துவந்த ரசிகர்களுக்க தன்னுடைய இந்த பதிவில் ரச்சிதா நன்றி தெரிவித்துள்ளார். ரசிகர்களின் இந்த அன்கண்டிஷனல் லவ்விற்கு நன்றி என்றும் ரச்சிதா தெரிவித்துள்ளார். அவர்களின் அன்பு இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

சின்னத்திரை சீரியல் நடிகை
சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் நடித்து சிறப்பான விமர்சனங்களையும் ஏராளமான ரசிகர்களையும் பெற்றவர் ரச்சிதா. இதன்மூலமே இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் நுழைந்தார். இவர் சேஃப் கேமாக இல்லாமல் அடித்து ஆடியிருந்தால் இந்த சீசனில் டைட்டிலை வெற்றி பெற்றிருக்கலாம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.