அறம் வெல்லும்.. ரசிகர்களின் அன்பிற்கு நன்றி சொன்ன விக்ரமன்.. வீடியோ வெளியீடு!

சென்னை : விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான இறுதிப்போட்டியுடன் நிறைவு பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியாளர்களாக விக்ரமன், ஷிவின் மற்றும் அசீம் இருந்த நிலையில், அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு, கார் மற்றும் பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முதன்மையான நிகழ்ச்சியாக பிக்பாஸ் உள்ள நிலையில், கடந்த 3 மாதங்களாக நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பல்வேறு கட்டங்களில் பல டாஸ்க்குகளுடன் ரசிகர்களை சந்தித்து, வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

 வெற்றி பெற்ற அசீம்

வெற்றி பெற்ற அசீம்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான இறுதிப் போட்டியுடன் நடந்து முடிந்துள்ளது. போட்டியின் இறுதிப் போட்டியாளர்களாக அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் பங்கேற்ற நிலையில், அசீம் நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

அசீமிற்கு வெற்றிக் கோப்பை, 50 லட்சம் ரூபாய் பரிசு மற்றும் விலையுயர்ந்த கார் ஆகியவை பரிசாக அளிக்கப்பட்டன. முன்னதாக இந்த நிகழ்ச்சியில் விக்ரமன்தான் வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது அசீம் வெற்றிப் பெற்றுள்ளார். இதையடுத்து விஜய் டிவியை புறக்கணித்து பலரும் ஹேஷ்டேக் வெளியிட்டனர்.

விக்ரமன் முதல் வீடியோ

விக்ரமன் முதல் வீடியோ

இதனிடையே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்துள்ள விக்ரமன் தற்போது தனது முதல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்களின் அன்பு குறித்து நெகிழ்ந்து பேசியுள்ளார். இந்த அளவிற்கு தன்மீது ரசிகர்கள் அன்பு செலுத்துவார்கள் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்களுக்கு நன்றி

ரசிகர்களுக்கு நன்றி

தனக்காக ரசிகர்கள் எந்த அளவிற்கு சப்போர்ட் செய்தார்கள் என்று தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்த பிறகுதான் தனக்கு தெரிந்தது என்றும் விக்ரமன் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னிச்சையாக ரசிகர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தியதற்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

விரைவில் ரசிகர்களுடன் சந்திப்பு

விரைவில் ரசிகர்களுடன் சந்திப்பு

பொங்கல் பரிசாக அறம் வெல்லும் என கோலம் தாய்மார்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். அனைவரது அன்பிற்கும் கடமைப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ள விக்ரமன், விரைவில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாகவும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை விரைவில் தெரிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X