பிக் பாஸ் சீசன் 6 எப்ப துவங்குது தெரியுமா.. பாக்கலாம் வாங்க!

சென்னை : இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.

தமிழில் இந்த நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து விரைவில் 6வது சீசன் துவங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் நிகழ்ச்சிக்குழு தற்போது முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மற்றவர்கள் வீட்டில் நடக்கும் விஷயங்களை தெரிந்துக் கொள்ள விரும்பும் மக்களின் விருப்பமே இந்த நிகழ்ச்சியின் அடிப்படை.

5 சீசன்களை கடந்த தமிழ் பிக்பாஸ்

5 சீசன்களை கடந்த தமிழ் பிக்பாஸ்

தமிழில் இந்த நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்துள்ளது. கடந்த 5வது சீசனில் ராஜு டைட்டிலை வெற்றிக் கொண்டுள்ளார். ஆனால் இந்த சீசன் அந்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் அடுத்ததாக வரவிருக்கும் 6வது சீசனில் சிறப்பான போட்டியாளர்களை களமிறக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளதாம்.

பலமான போட்டியாளர்கள்

பலமான போட்டியாளர்கள்

சமீபத்தில் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கிய ஸ்ரீநிதி, பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் டிடி உள்ளிட்டவர்களும் இந்த பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி எப்போது துவங்கும் என்ற அறிவிப்பிற்காகவும் போட்டியாளர்கள் அறிவிப்பிற்காகவும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விரைவில் ப்ரமோ சூட்டிங்

விரைவில் ப்ரமோ சூட்டிங்

இதையடுத்து இந்த நிகழ்ச்சியின் ப்ரமோவிற்கான சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சியை கமலே தொகுத்து வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அடுத்தடுத்த படங்களை அறிவித்துவரும் கமல்ஹாசன், விரைவில் இந்தியன் 2 படத்திலும் இணையவுள்ளார்.

தொகுப்பாளர் கமல்?

தொகுப்பாளர் கமல்?

இந்நிலையில் அவர் திடீரென படப்பிடிப்பு அதிகமாக உள்ளதாக கூறி வெளியேறாமல் இருந்தால் சரி என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. கடந்த பிக்பாஸ் 5 சீசனை சிறப்பாக தொகுத்து வழங்கிய கமல், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து படப்பிடிப்பை காரணம் காட்டி இடையிலேயே விலகியது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் ஒளிபரப்பு?

அக்டோபரில் ஒளிபரப்பு?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், வரும் அக்டோபர் மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் இந்த நிகழ்ச்சி துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ப்ரமோ சூட் நடைபெறவுள்ள நிலையில், விரைவில் இதன் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

எப்போதும் விஜய் டிவியின் முதன்மை நிகழ்ச்சியாக இருந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்த சீசனில் மேலும் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் மற்றும் அதிகமான பலத்துடன் மோதும் போட்டியாளர்கள் இந்த சீசனில் களமிறங்கவுள்ள நிலையில், இந்த சீசனில் அதிகமான ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X