Don't Miss!
- Technology
உங்கள் மோதிரம் சைஸ் என்ன? போன் மூலம் சரியாக அளவெடுக்கலாமா? அது எப்படி?
- Finance
அதானி நினைத்தது நடந்தது.. ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ன செய்யப் போகிறது..?!
- Lifestyle
90% மக்கள் பைல்ஸ் என்று நினைத்து அசால்டாக நினைக்கும் குடல் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள்!
- News
பிபிசி ஆவணப் படம்- மத்திய அரசின் தடை க்கு எதிரான வழக்கு- பிப் 6-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
- Automobiles
இந்தியர்களின் வாயை பிளக்க வைத்த டாடா நெக்ஸான் இவி... 1.38 லட்சம் கிமீ பயணித்து புதிய சாதனை!
- Sports
பாண்ட்யா கூறிய ஒரு வார்த்தை.. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி கண்டது எப்படி? சூர்யகுமார் சுவாரஸ்ய தகவல்
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்க 3 மடங்கு சம்பளம் கேட்ட சல்மான் கான்.. என்னங்க ஒரு நியாயம் வேணாமா!
மும்பை : ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியில் 15 சீசன்களை கடந்துள்ளது.
அடுத்ததாக விரைவில் பிக்பாஸ் சீசன் 16 குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சல்மான்கான் போட்ட கண்டீஷன்தான் காரணமாம்.
கலங்கிய
கண்ணோடு
மரியாதை
செலுத்துகிறோம்..
பிரதாப்
போத்தன்
மறைவுக்கு
நடிகர்
நாசர்
இரங்கல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி
இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக பல சீசன்களை கடந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தமிழில் 5 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சி விரைவில் தனது ஆறாவது சீசனை துவங்கவுள்ளது. தமிழில் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

6வது சீசன்
5வது சீசனை முடித்துவிட்டு, பிக்பாஸ் அல்டிமேட்டிலிருந்து இடையில் விலகிய கமல்ஹாசன், தற்போது மீண்டு 6வது சீசனில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சீசனுக்காக போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளது.

இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சியை இந்தியில் பாலிவுட் ஹீரோ சல்மான் கான் தொடர்ந்து 13 சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார். அவரது தொகுப்பில் ரசிகர்கள் இந்த ஷோவை கொண்டாடி வருகின்றனர். அவர் பலமுறை இந்த ஷோவிலிருந்து வெளியேற முயற்சித்து வருவதாகவும் ஆனால் டிவி நிர்வாகம் அவரை விடுவதாக இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பிக் பாஸ் சீசன் 16 நிகழ்ச்சி
இந்நிலையில் இந்த 16வது சீசன் விரைவில் துவங்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நிகழ்ச்சி தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியாகின. Khatron Ke Khiladi 12 மற்றும் Jhalak Dikhla Jaa ஆகிய ஷோக்களால் இந்த நிகழ்ச்சியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின.

3 மடங்கு சம்பளம் கேட்ட சல்மான்
தற்போது இந்த சீசனை தொடர்ந்து தொகுத்து வழங்குவதற்கு 3 மடங்கு சம்பளத்தை சல்மான் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் டிவி நிர்வாகம் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளதாம். கடந்த சீசனை தொகுத்து வழங்க ரூ.350 ரூபாயை அவர் பெற்ற நிலையில், தற்போது ரூ.1050 கோடி கொடுத்தால் தான் இந்த சீசனை தொகுத்து வழங்குவேன் என்று சல்மான் அடம்பிடிக்கிறாராம்.

யோசனையில் டிவி நிர்வாகம்
விரைவில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சல்மானின் இந்த கண்டீஷனால் டிவி நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது. இதையடுத்து எந்த மாதிரியான முடிவை எடுப்பது என்றும் யோசித்து வருகிறதாம். மிகவும் சிறப்பான வருமானத்தை கொடுத்துவரும் இந்த நிகழ்ச்சியை தொடர்வதில் இத்தகைய சிக்கலை தற்போது சந்தித்துள்ளது சேனல்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக காத்திருக்கும் ரசிகர்கள்தான் தற்போது அதிருப்தி அடைந்துள்ளனர். விரைவில் நிகழ்ச்சி துவங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இத்தகைய காரணங்களால் நிகழ்ச்சி தள்ளிப் போவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விரைவில் இந்த விஷயத்தில் முடிவு எட்டப்படும் என்று நம்பலாம்.