Don't Miss!
- News
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Technology
108எம்பி ரியர் கேமரா கொண்ட புதிய ஒப்போ 5G போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க..!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
என்னது பிக்பாஸ் நிகழ்ச்சி நவம்பர் மாதத்திற்கு தள்ளிப் போகுதா.. ரசிகர்கள் அதிர்ச்சி!
மும்பை : இந்திய அளவில் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஷோவாக உள்ளது பிக் பாஸ்.
தமிழில் விரைவில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நான்
கோபக்காரன்..
ஷோபாவை
பலமுறை
அடித்திருக்கிறேன்..
எஸ்.ஏ.சந்திரசேகர்
சொன்ன
ஷாக்
நியூஸ்!

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி
விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி நிகழ்ச்சியாக பிக் பாஸ் காணப்படுகிறது. இந்தத் தொடர் முதல் சீசனிலிருந்தே ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது. லேட் நைட்டில் துவங்கப்பட்டாலும் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்காக காத்திருந்து பார்த்துவிட்டுதான் தூங்கப் போவார்கள். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

5 சீசன்கள் நிறைவு
இந்த நிகழ்ச்சியின் முதல் 5 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. இந்த அனைத்து சீசன்களையும் உலக நாயகன் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கினார். தொடர்ந்து பிக்பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியும் துவங்கப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சியிலிருந்து இடையிலேயே கமல்ஹாசன் விலகினார். தொடர்ந்து சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

விரைவில் பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் அளவிற்கு பிக்பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சி ரசிகர்களை அதிகமாக கவரவில்லை. ஆயினும் சிறப்பான பல சம்பவங்களை இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அரங்கேற்றினர். இந்நிலையில் அடுத்ததாக விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியாளர்கள் லிஸ்ட்
இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. குக் வித் கோமாளி தர்ஷன் உள்ளிட்டவர்கள் இந்த லிஸ்ட்டில் உள்ளனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

தள்ளிப் போகும் பிக்பாஸ் நிகழ்ச்சி
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி தள்ளிப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தமிழ் பிக்பாஸ் இல்லை. மாறாக இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16வது சீசன்தான் தற்போது தள்ளிப் போகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழை போலவே இந்தியிலும் இந்த நிகழ்ச்சி விரைவில் துவங்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நவம்பர் மாதத்திற்கு தள்ளிப் போகிறதா?
Khatron Ke Khiladi 12 மற்றும் Jhalak Dikhla Jaa ஆகிய ஷோக்களால் பிக் பாஸ் 16 ஷோ தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பிக்பாஸ் 16 நிகழ்ச்சி எப்போது துவங்கும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் காத்துள்ளனர். ஆனால் இந்தத் தொடர் நவம்பர் மாதத்திற்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Recommended Video

மிகச்சிறந்த நிகழ்ச்சி
மக்களின் விருப்பத்திற்குரிய பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மிகச்சிறந்த நிகழ்ச்சியாக பெயரெடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் 16வது சீசனை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரபல ஹீரோ சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார்.