Don't Miss!
- Sports
2 வீரர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் பயிற்சி.. ஜிம்பாப்வே தொடரில் கூடுதல் பொறுப்பு.. என்ன காரணம் தெரியுமா
- Finance
ஜூலை மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 13.93%..கொஞ்சம் பெட்டர் தான்!
- Technology
Moto G62 5G ரிவ்யூ- இந்த மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனை வாங்கலாமா? வேண்டாமா?
- Lifestyle
உங்களுக்கு வயசாகாம எப்பவும் இளமையா ஜொலிக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- News
செஸ் ஒலிம்பியாட் செலவு கணக்கை பொதுவில் வைக்கிறோம்.. அதிமுகவுக்கு அமைச்சர் மெய்யநாதன் சவால்!
- Automobiles
எந்த பிரச்சனையும் இல்லை.. நடுவானிலேயே விமானிகள் அசந்து தூங்குவார்கள்... ஆனால் ஒன்று மட்டும் முக்கியம்...
- Travel
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த இந்திய தேசக் கொடி!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. நெகிழ்ச்சிப்பதிவு.. எதுக்குன்னு தெரியுமா?
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 5 சீசன்களை கடந்துள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் வெளியான நிலையில், அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 6 துவங்கவுள்ளது.
கடந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பல்வேறு டாஸ்குகளுடன் ரசிகர்களை கவர்ந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை ராஜூ வென்றார்.
நான் ரொம்பலாம் படிக்கமாட்டேன்னு சொன்ன சிவகார்த்திகேயன்.. அதுக்கு அர்ஜுன் ரியாக்ஷன பாத்தீங்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சி
விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 5 சீசன்களை கடந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் வெளியாகியது. ரசிகர்களின் விருப்பத்திற்குரிய இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் விரைவில் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியை கமல் அல்லது சிம்பு யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 5
கடந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக வந்தவர் ராஜூ. இறுதியில் இவருகும் பிரியங்காவிற்கும் இடையில் போட்டி கடுமையாக இருந்த நிலையில், ரசிகர்களின் ஆதரவுடன் டைட்டிலை தட்டித் தூக்கினார் ராஜூ. இந்நிலையில் இவர் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிப்புப் பயணத்தை துவக்கிய ராஜூ
ராஜூ நடிப்பில் சமீபத்தில் டான் படம் வெளியானது. கேரக்டர் சிறியதாக இருந்தாலும் இவருக்கு வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து கார்த்தியின் சர்தார் படத்திலும் இவர் முக்கியமான ரோலில் நடித்துள்ளதாக கடந்த வாரத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை ராஜூ மறுத்திருந்தார்.

ராஜூ பிறந்தநாள்
இந்நிலையில் இன்றைய தினம் ராஜூ தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்தனர். இதனால் ராஜூ மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தை உணர்ந்துள்ளார். தொடர்ந்து நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ராஜூ நெகிழ்ச்சிப்பதிவு
சினிமா கனவுகள் மற்றும் ஆசைகளுடன் ஆண்டுதோறும் சென்னைக்குவரும் கோடிக்கணக்கான சாமானியர்கள் போல தானும் ஒருவன் என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது ரசிகர்களின் ஆசி மற்றும் அரவணைப்பால் தான் சினிமா மற்றும் தொலைக்காட்சித் துறையில் சிறப்பாக மாறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ரசிகர்களுக்கு நன்றி
இன்றைய தினம் பிறந்தநாளில் அளவற்ற அன்பை கொடுத்திருக்கும் ரசிகர்களுக்கு நன்றி சொல்ல தான் கடமைப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். முன்னேற எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சறுக்காமல் இருக்க தனக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஏராளமானோர் வாழ்த்து
பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்களிடமும் தன்னை கொண்டு சேர்த்த யூடியூப் நண்பர்கள் மீம் கிரியேட்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் அவர் இந்தப் பதிவின்மூலம் நன்றி தெரிவித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் அவர் கமிட்டாக பலரும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை முன்னதாக தெரிவித்திருந்தனர்.