»   »  ரஜினி படத் தலைப்பு.... ரஜினி பஞ்ச்... இரண்டும்தான் இப்போதைய ஹீரோக்களுக்கு 'ஆக்ஸிஜன்'!

ரஜினி படத் தலைப்பு.... ரஜினி பஞ்ச்... இரண்டும்தான் இப்போதைய ஹீரோக்களுக்கு 'ஆக்ஸிஜன்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்றைய இளம் ஹீரோக்களில் பலரும் விரும்புவது ரஜினியின் படத் தலைப்புகள் மற்றும் அவரது பஞ்ச் டயலாக்குகளைத்தான்.

இந்த இரண்டையும் தங்கள் படங்களுக்கு தலைப்பாக்கிக் கொள்ள துடியாய்த் துடிக்கிறார்கள். பில்லாவில் ஆரம்பித்தது இந்த ரஜினி தலைப்பு வேட்டை.

Big demand for Rajini titles & punch dialogues

தொடர்ந்து தனுஷ், சுந்தர் சி, விஷால், உதயநிதி என ஆளாளுக்கு ரஜினி படத் தலைப்புகளைச் சூட்டிக் கொண்டார்கள். அட, ரஜினி என்றதுமே பகுத்தறிவைக் கழற்றி வைத்துவிடும் சத்யராஜ் கூட குருசிஷ்யன் என்ற ரஜினி படத் தலைப்பில் நடித்தார்.

இப்போது ஒருபடி மேலேபோய் ரஜினியின் பஞ்ச் வசனங்களை, மாஸ் பாடல் வரிகளை தங்கள் படங்களின் தலைப்பாக்கி வருகிறார்கள்.

சரவணன் இருக்க பயமேன்?, பொதுவாக எம்மனசு தங்கம் போன்ற தலைப்புகளில் இப்போது படங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

அடுத்து ரஜினியின் ப்ளாக்பஸ்டர் படமான வீரா தலைப்பை நடிகர் கிருஷ்ணா கைப்பற்றிக் கொண்டுள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்கள் ரஜினியின் பழைய படத் தலைப்பு மற்றும் பஞ்ச் வசனங்களை தலைப்பாகக் கொண்டு வெளியாகவிருக்கின்றன.

English summary
Most of the leading heroes now wanted Rajini movie titles and his punch dialogues as titles for their movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil