twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக்பாஸ்: 'எல்லாம் டிஆர்பி ப்ளான்பா... நேர்மையா இருந்தா முழுசையும் லைவா காட்டலாமே!' #BigBoss

    By Shankar
    |

    பிக் பாஸ் பற்றித்தான் சமூக வலைத் தளங்களில் பலரும் கருத்து சொல்லி வருகிறார்கள். ஆனால் பெரும்பாலும் அந்த நிகழ்ச்சிக்கு எதிராகவும், கடுமையாகக் கண்டித்தும் கருத்து கூறி வருகின்றனர்.

    பிக் பாஸ் வீட்டுக்குள் 15 பேர் போன, அவர்களுக்கு வெளியுலகத் தொடர்புகளே இருக்காது என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிபந்தனை.

    போன் யூஸ் பண்றாங்களோ...?

    போன் யூஸ் பண்றாங்களோ...?

    ஆனால் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் கணேஷ் வெங்கட்ராமன், காயத்ரி போன்றோர் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருவது எப்படி? அவர்கள் எப்படி போனை, சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்த முடிந்தது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    எல்லாம் டிஆர்பிக்காக

    எல்லாம் டிஆர்பிக்காக

    பூட்டிய வீட்டுக்குள் நூறு நாட்கள் இருக்க வேண்டும். ஆனால் நூறு நாளும் ஏதாவது ஒரு சர்ச்சை, பிரபலங்களுக்குள் சண்டை நடந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் டிஆர்பி டாப்பிலேயே இருக்கும் என்பதால், இந்த சர்ச்சைகள் அனைத்தும் திட்டமிட்டே உருவாக்கப்படுவதாக பெரும்பாலான மக்கள் நம்ப ஆரம்பித்துள்ளனர்.

    WWF போல

    WWF போல

    குறிப்பாக WWF ஷோக்களில் நடப்பதைப் போன்ற ஒரு நடிப்புதான் இதுவும்.. திட்டமிட்ட பொய்கள் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    லைவா காட்டுங்க நம்புறோம்...

    லைவா காட்டுங்க நம்புறோம்...

    'இவர்கள் வெளியில் சொல்கிறபடி இந்த ஷோ நேர்மையாக நடக்கிறதென்றால், 24 மணி நேரம் அந்த வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதை லைவாகக் காட்டட்டும். ஓரளவு நம்பலாம். எதற்காக எடிட் செய்கிறார்கள்?' இப்படியும் சிலர் கேட்கிறார்கள்.

    மீம்ஸுக்கு பஞ்சமில்லை

    மீம்ஸுக்கு பஞ்சமில்லை

    எப்படித்தான் இவ்வளவு மீம்ஸ்களை உருவாக்குகிறார்களோ.... என்னமா யோசிக்கிறாங்கப்பா என வியக்கும் வகையில் பிக் பாஸ் குறித்த மீம்ஸ்களை போட்டுத் தாக்குகிறார்கள் வலைஞர்கள்.

    முதல் நாள் எடுபடாவிட்டாலும்...

    முதல் நாள் எடுபடாவிட்டாலும்...

    இப்படி பலதரப்பட்ட கண்டனங்கள் எதிர்ப்புகள் இருந்தாலும், இந்த ஷோவை எப்போது அந்த டிவியில் ஒளிபரப்பினாலும் தவறாமல் ஆஜராகி பார்த்து, டென்சனாகி கமெண்ட் போடுவதையே கடமையாகவும் வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் பேரு டேமேஜானாலும் ஷோ சக்ஸஸாகிடும் போல!

    English summary
    It seems that most of the viewers of Big Boss show are severely criticising the show but never fail to watch the same.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X