»   »  மார்ச் 1-ம் தேதி உத்தமவில்லன் இசை... பிரமாண்ட விழாவில் வெளியிடுகிறார்கள்

மார்ச் 1-ம் தேதி உத்தமவில்லன் இசை... பிரமாண்ட விழாவில் வெளியிடுகிறார்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் ஹாஸனின் அடுத்த படமான உத்தம வில்லன் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 1-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது.

கமல் நடிப்பில் உத்தம வில்லன், பாபநாசனம் ஆகிய இரு படங்களும், இயக்கம் மற்றும் நடிப்பில் விஸ்வரூபம் 2 படமும் வெளியாகாமல் உள்ளன.

மூன்றுமே படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இருப்பவை. விஸ்வரூபம் 2 இன்னும் போஸ்ட் புரொடக்ஷன் அளவில் நிற்கிறது.

இந்த நிலையில் முதலில் உத்தம வில்லனை வெளியிடும் முயற்சியில் உள்ளார்.

ஏப்ரல் 2

ஏப்ரல் 2

ஏப்ரல் 2-ம் தேதி இந்தப் படம் வெளியாகவிருக்கிறது. கமலுடன் ஜெயராம், மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர், ஆண்ட்ரியா, பூஜாகுமார், பார்வதி நாயர் போன்றோர் நடித்துள்ளனர். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இசை வெளியீடு

இசை வெளியீடு

இந்த படத்தின் பாடல்களை சென்னையில் பிரமாண்ட விழா நடத்தி வெளியிட திட்டமிட்டுள்ளனர். மார்ச் 1-ந்தேதி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்த விழா நடக்கிறது. இதில் முன்னணி நடிகர், நடிகைகள் பலர் பங்கேற்க உள்ளனர்.

வில்லன்கள்

வில்லன்கள்

இந்த விழாவில் திரையுலகில் சாதனை படைத்த அனைத்து வில்லன் நடிகர்களையும் அழைத்து கவுரவப்படுத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.

லிங்குசாமி

லிங்குசாமி

லிங்குசாமி-சுபாஷ் சந்திரபோஸின் திருப்பதி பிரதர்ஸ் இந்த படத்தை தயாரித்து உள்ளது. ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை வாங்கி உலகம் முழுவதும் வெளியிடுகிறது.

English summary
Kamal's Uthama Villain audio will be released in big level on March 1.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil