»   »  உடைந்தது தயாரிப்பாளர் சங்கம்... ஞானவேல் ராஜாவுக்கு 500 பேர் ஆதரவு!

உடைந்தது தயாரிப்பாளர் சங்கம்... ஞானவேல் ராஜாவுக்கு 500 பேர் ஆதரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்கத் தேர்தல் விஷயத்தில் கலைப்புலி தாணுவின் ஒரு தலைப்பட்சமான முடிவால், தயாரிப்பாளர் சங்கத்தில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது. அந்த அதிருப்தியே இப்போது பிளவாக மாறியுள்ளது.

தாணுவின் தலைமைக்கு எதிராக 500-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் தனி அணியாகச் செயல்பட முடிவு செய்துள்ளனர். இவர்களுக்கு ஞானவேல் ராஜா தலைமை தாங்குகிறார்.

Big split in Producers Council

நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணிக்கு தமிழ்த் திரைபட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இதற்கு கார்த்தியின் நெருங்கிய உறவினரான ஸ்டூடியோகிரீன் ஞானவேல்ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இது குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் ஆதரவாளர்கள் கூட்டம் ஸ்டுடியோ க்ரீன் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜாவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலர் தங்கள் அணிக்கு வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தாணு எல்லா விஷயத்திலும் தன்னிச்சையாகச் செயல்படுவதாக ஞானவேல்ராஜா தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இந்த மாதத்திலிருந்து புதுப்படங்கள் வெளியிடுவதை நிறுத்தப் போவதாக முன்பு தாணு அறிவித்திருந்தார். மாதம் முடிய இன்னும் 10 நாட்களே உள்ளன. இந்த முடிவை மீண்டும் அறிவிக்கும்பட்சத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் கடும் மோதல் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

English summary
The powerful Tamil Film producers Council has splitted and a group of 500 plus producers going against the present President Kalaipuli Thaanu.
Please Wait while comments are loading...