போட்டியாளர்களை தனித்தனியாக கலாய்க்கும் கமல்...கலகலப்பான பிக்பாஸ் ப்ரோமோ

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 துவங்கி முதல் வாரம் நிறைவடைந்து விட்டது. பிக்பாஸ் சீசன் 5ல் முதல் முறையாக கமல் வரும் வார இறுதி எபிசோட் இன்றும், நாளையும் ஒளிபரப்பாக உள்ளது.

பிக்பாஸ் துவங்கியது முதலே பல குற்றச்சாட்டுகளையும், கேள்விகளையும் நெட்டிசன்கள் முன் வைத்து வருகிறார்கள். தினமும் ஒளிபரப்பாகும் எபிசோட்களை பார்த்து விட்டு, ஒவ்வொன்றாக கவனித்து, கமலுக்கு வரிசையாக கேள்வி அனுப்பி வருகிறார்கள்.

அபிஷேக்கை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

அபிஷேக்கை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

அதிலும் அபிஷேக் ராஜா மீது பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது. கமல் சார் அவரை கேளுங்கள் என்றே அதிகமானவர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால் இன்று கமல் வரும் எபிசோடிற்கு வழக்கத்தை விட கூடுதலாக ஆர்வம் அதிகரித்துள்ளது. கமல் என்ன பேச போகிறார் என்பதை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கலாய்க்கும் கமல்

கலாய்க்கும் கமல்

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக உள்ள எபிசோடிற்கான இரண்டாவது ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில், கமல் வந்த உடனேயே பிரியங்கா கேஸ் பைப் வழியாக கதை சொல்வதை கலாய்க்கிறார். தொடர்ந்து, அண்ணாச்சி ஆங்கிலம் கற்கும் ஆர்வத்தை வட்டார வழக்கு பேச்சை மறந்து விடுவாரோ என எனக்கு பதற்றமாக உள்ளது என்கிறார் கமல்.

வைரலாகும் ப்ரோமோ

வைரலாகும் ப்ரோமோ

இந்த வீட்டில் முதல் முறையாக துப்பாக்கி சூடு நடத்த காரணமாக இருந்தவர் அபிஷேக். தூங்காதே தம்பி தூங்காதே என்கிறார் கமல். இந்த ப்ரோமோ வீடியோ செம வைரலாகி உள்ளது. இதை விஜய் டிவி வெளியிட்ட ஒரு மணி நேரத்திலேயே இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. அதிகமானவர்கள் லைக் செய்து, கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அபிஷேக் விட்டுடாதீங்க

அபிஷேக் விட்டுடாதீங்க

ஒரு சிலர், அபிஷேக் கண்டிப்பாக குறைந்தது 50 நாட்களாவது பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மீம்கள் போட யாரு கன்டென்ட் கொடுப்பார்கள் என கலாய்த்துள்ளனர். வாத்தியாரு அபிஷேக் பேசின வீடியோவ பாத்துட்டு வந்திருப்பார் போலவே என அபிஷேக்கை கலாய்த்தே அதிக கமெண்ட்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

கமல் காரணம் சொல்வாரா

கமல் காரணம் சொல்வாரா

இன்னும் கமல் என்னவெல்லாம் கேட்க போகிறார் என்பதை பார்க்க பிக்பாஸ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். அதே போல் பிக்பாஸ் போட்டியில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறியது உண்மை தானா. எதற்காக அவர் வெளியேறினார். அவருக்கு பதில் நடிகை ஷகீலாவின் மகள் மிலா வரப் போவதாக கூறப்படுவது உண்மையா. இது பற்றி கமல் ஏதாவது அறிவிப்பு வெளியிடுவாரா எனவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X