வந்தான்...ரூல்ஸ் பிரேக் பண்ணினான்...ரிபீட்டு...சொன்னபடியே செஞ்சுட்டீங்களே பாலா
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் வந்த முதல் நாளே ரூல்ஸ் பிரேக் பண்ணி, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் பாலாஜி முருகதாஸ். அதோடு மட்டுமில்லாமல் ட்விட்டர் டிரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓடிடி வெர்சனான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் துவங்கப்பட்டது. 24 மணி நேர நிகழ்ச்சியாக இது நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் பிக்பாஸின் ஐந்து சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களில் இருந்து 14 பேர் தேர்வு செய்யப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆஹா செம போட்டியா இருக்குமே
முதல் நாளே அசத்தலாக, கலக்கல் காமெடி கலாட்டா, வனிதாவின் ஆட்டத்துடன் ஆரம்பமாகி உள்ளது பிக்பாஸ் அல்டிமேட். வந்ததுமே இந்த வீட்டிற்கு நான் தான் ஓனர் என கெத்து காட்டினார் வனிதா. இதனால் வனிதா, பாலாஜி முருகதாஸ் இடையே செம போட்டி இருக்கும் போல் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் பிக்பாஸ் சீசன் 4 ல் பாலாஜியும் இதே டயலாக்கை பேசி, ஹவுஸ்மேட்களிடம் கெத்து காட்டினார்.

எனக்கே திரும்பி வந்துடுச்சே
நேற்றும் வந்த உடனேயே ரெஸ்ரிக்டட் ஏரியா என போடப்பட்ட இடத்திற்குள் தாவி குதித்து சென்று, அங்கு போடப்பட்ட மெத்தையில் படுத்து தூங்கி பார்த்தார். இதற்காக முதல் நாள், முதல் ஆளாதா பாதாள சிறைக்குள் அனுப்பப்பட்டார். அங்கும் போய், பிக்பாஸ் இதெல்லாம் நியாயமே இல்லை முதல் நாளேவா. இங்கு வருவதற்கு முன்பு தான் சோஷியல் மீடியாவில் மாநாடு ஸ்டைலில் மீம்ஸ் போட்டு விட்டு வந்தேன். வந்தான்...செஞ்சான்...போனான்..ரிப்பீட்டுன்னு. இப்போ அது எனக்கே நடக்குதே என புலம்பினார்.

பாலாவுக்கே ரூல்சா
இதை வைத்து நெட்டிசன்கள் பலர் சோஷியல் மீடியாவில் கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர். யாருகிட்ட...பாலாகிட்டயேவா...ரூல்சா? அப்படின்னா என்னன்னு கேட்குறவன். வேற லெவல் ப்ரோ. வந்தான்...ரூல்ஸ் பிரேக் பண்ணினான்...ரிபீட்டு...என பாலா மெத்தையில் தூங்கின போட்டோவை போட்டு கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

வேறலெவல் பாலா
BalajiMurugadoss என்ற ஹேஷ்டேக்கையும் ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். பிக்பாஸ்ன்னா இது தான் பிக்பாஸ். வீட்டிற்கு வந்ததுமே ரூல்ஸ் பிரேக், ஜெயிலு, அடுத்தநாள் காலையில் சேரை வைத்தே ஒர்க் அவுட். இதெல்லாம் பாலாவால் மட்டும் தான் பண்ண முடியும் என கூறி ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையும் பாலாஜி பற்றி பேச வைத்து விட்டனர். இதுவரை பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களுக்கு பதிவான ஓட்டுக்கள் லிஸ்ட்டிலும் பாலாஜி தான் டாப் என தகவல் வெளியாகி உள்ளது. போகிற போக்கை பார்த்தால் வனிதாவை ஓரங்கட்டி விடுவார் போல.


Click it and Unblock the Notifications











