பிக் பாஸ் 3 வாய்ப்புக்காக படுக்கை: முதல்வரை சந்திக்கும் டிவி நடிகை

By Siva

ஹைதராபாத்: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள படுக்கைக்கு அழைக்கப்பட்டது தொடர்பாக பெரிய அளவில் போராட்டம் நடத்துவதுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து புகார் அளிக்க உள்ளார் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஸ்வேதா ரெட்டி.

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஸ்வேதா ரெட்டியை படுக்கைக்கு அழைத்துள்ளனர்.

அதன் பிறகு அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்துவிட்டார்.

ஸ்வேதா ரெட்டி

ஸ்வேதா ரெட்டி

என்னை ஒரு போட்டியாளராக ஆக்குகிறேன் என்று கூறிவிட்டு பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறி ஸ்வேதா ரெட்டி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டதை கண்டித்து அமராவதி, விஜயவாடா மற்றும் தமிழகத்தில் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளார்.

முதல்வர்

முதல்வர்

பிக் பாஸ் விவகாரம் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்தச் செய்யும் வகையில் ஸ்வேதா ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளார். பாலியல் தொல்லைக்கு எதிரான ஸ்வேதா ரெட்டியின் போராட்டத்திற்கு பல பெண்கள் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து அவரை ஊக்குவித்துள்ளன.

போராட்டம்

போராட்டம்

டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பின்னால் நடக்கும் விஷயங்களை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம். நான் நியாயம் கேட்டு போராடுவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஸ்வேதா ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நாகர்ஜுனா

நாகர்ஜுனா

முன்னதாக பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கும் முன்பே அதை கண்டித்து நாகர்ஜுனாவின் வீட்டிற்கு முன்பு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். மேலும் விஜயவாடாவிலும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு எதிராக நேற்று போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷமிட்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம் நடப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல. ஒவ்வொரு சீசனிலும் போராட்டம் நடக்கத் தான் செய்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X