twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Bigg boss 3: உள்ள நுழைஞ்சதும் ஒரே போடு... காத்திருக்கும் அருவா மீசை கொடுவா பார்வை!

    பிக் பாஸ் வீட்டினுள் பல அதிரடி மாற்றங்களை செய்துள்ளனர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்.

    |

    Recommended Video

    Bigg Boss 3: பிக் பாஸ் வீட்டை சுற்றி பார்க்கணுமா.. அப்ப இங்க க்ளிக் பண்ணுங்க!- வீடியோ

    சென்னை: பிக் பாஸ் வீட்டின் வெளிப்புறத்தில் மட்டுமல்ல, வீட்டின் உள்ளேயும் பல அதிரடியான மாற்றங்களைச் செய்துள்ளனர்.

    பிக் பாஸ் வீட்டின் வெளிப்புற அமைப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி ஏற்கனவே ஒரு செய்தியில் பார்த்தோம். இப்போது அப்படியே வலது காலை எடுத்து வைத்து உள்ளே செல்லலாம்.

    வீட்டிற்குள் நுழைந்ததும் ஒருபுறம் சைக்கிளோடு ஒருவர் ஓவியமாக நம்மை வரவேற்கிறார். அதற்குப் பக்கத்திலேயே விருமாண்டியாக கமல் மிரட்டுகிறார். ஆங்காங்கே அழகிய கண்ணாடி கோப்பைகள், விளக்குகள் என வித்தியாசமாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த வீட்டோடு முந்தைய வீடுகளை ஒப்பிடும்போது, 'வேண்டா வெறுப்பா பிள்ளையப் பெத்து காண்டாமிருகம்னு பேர் வச்ச மாதிரி தான்' இருந்தது முந்தைய வீடுகளின் உள் அலங்காரம். இப்போது ஏதோ புதுவீடு கட்டி பிக் பாஸே குடி போவது போல், பார்த்து பார்த்து அலங்கரித்துள்ளனர்.

    பிக் பாஸ் 3:கார்டன் ஏரியா, புறணி கார்னர், ஸ்மோக்கிங் ரூம், சிறை... அட எல்லாத்தையுமே மாத்திட்டீங்களே! பிக் பாஸ் 3:கார்டன் ஏரியா, புறணி கார்னர், ஸ்மோக்கிங் ரூம், சிறை... அட எல்லாத்தையுமே மாத்திட்டீங்களே!

    வட்டமான டேபிள்:

    வட்டமான டேபிள்:

    எப்போதும் போல் நீண்ட டைனிங் டேபிள் இம்முறை மிஸ்ஸிங். அதற்குப் பதில் வட்டமாக கண்ணாடி போல் வெளிப்படையான டேபிள். யாரும் டேபிளுக்கு அடியில் எதையும் ஒளிச்சு வச்சு சாப்பிட முடியாது. நடுநாயகமாக ஒரே ஒரு கேமரா. அதன் அருகிலேயே சாப்பாட்டு வண்டி போன்ற அமைப்பில் அடுப்பு மேடை.

    குட்டி இருக்கைகள்:

    குட்டி இருக்கைகள்:

    வீட்டுக்குள்ள போற அன்னைக்கு எல்லாரும் சிரிச்சுக் கிட்டாலும், எப்படியும் ரெண்டு நாள்ல நாலு கோஷ்டியா போட்டியாளர்கள் பிரிஞ்சிடுவாங்கனு பிக் பாஸுக்கு தெரியும். இல்லாட்டியும் ஏதாவது சிண்டு முடிச்சு விட்டு, அவர் அந்த வேலையை சுலபமா செஞ்சிடுவாரு. அதனால், பெரிய டைனிங் டேபிளுக்கு பக்கத்தில் மூன்று பேர் அமரும்படி குட்டி குட்டி இருக்கைகள். ஆனால், அங்கே தான் பிக் பாஸின் குசும்பை நாம் நோட் பண்ண வேண்டும். மூன்றும் பன்னிக்குட்டி போன்ற விலங்கு உருவத்திலும், நடுவில் கழனித் தொட்டி போலும் அது அமைக்கப்பட்டுள்ளது.


    வாவ்.. 'பிக் பாஸ் 3' பிரமாண்ட வீட்டுக்குள் இவ்வளவு வசதி இருக்குதா.. அசரடிக்கும் படங்கள்!

    மஞ்சள் சோபா:

    மஞ்சள் சோபா:

    அகம் டிவி பார்க்கும் இடத்தில் அதே மஞ்சள் நிற சோபா (செண்டிமெண்டா இருக்குமோ). ஆனால், எது அகம் டிவி என தேடிக் கண்டுபிடிக்கவே அரை மணி நேரம் ஆகும் போல, அந்தளவிற்கு அகம் டிவியைச் சுற்றி அத்தனை போட்டோபிரேம்கள். கமலை நீண்ட நேரம் பார்க்க விரும்பாதவர்கள், அகம் டிவியைப் பார்ப்பது போலவே அருகில் இருக்கும் மற்ற புகைப்படங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.

    தனித்தனி படுக்கை அறை:

    தனித்தனி படுக்கை அறை:

    அடுத்து படுக்கை அறை. போன முறை இருந்தது போலவே இருக்கிறது. என்ன, பெட்ஷீட், தலையணை உறை டிசைன் மாறி இருக்கிறது. இதில் முக்கியமான மாற்றம் என்னவென்றால் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் அறைகளுக்கு இடையே கடந்த முறை இருந்த கண்ணாடி தடுப்பு இம்முறை இல்லை. தாண்டிக் குதித்து அடுத்த அறைக்கு சுலபமாக சென்று விடலாம். அடுத்த சீசனில் இதையும் பிக் பாஸ் எடுத்து விடுவார் என நினைக்கிறேன். பெண்கள் அறையில் போன தடவை இருந்த பாத்ரூம் இம்முறையும் இருக்கிறது.

    எமதர்மராஜா படம்:

    எமதர்மராஜா படம்:

    கன்பெக்சன் ரூமின் வாசலே மிரட்டலாக இருக்கிறது. எமதர்மராஜா போன்ற ஒரு உருவம் பைனாகுலர் வைத்து பார்ப்பது போல் அதன் கதவு உள்ளது. உள்ளே சென்றால் சேரின் அமைப்பும் மாறி இருக்கிறது. இனி ஒருவர் தோளில் மற்றவர் உட்காருவது போல் கஷ்டப்பட்டு அதில் உட்கார வேண்டாம். இந்த சேருக்குப் பின்னால் அகம் டிவி அருகே இருந்ததுபோலவே நிறைய போட்டோ பிரேம்கள். இது பிக் பாஸ் டைம். போட்டியாளரைப் பார்க்க பிடிக்கவில்லை என்றால் அவரும் போட்டோபிரேம்களைப் பார்த்துக் கொள்ளலாம்.

    பாத்ரூமில் அட்ராசிட்டி:

    பாத்ரூமில் அட்ராசிட்டி:

    சரி வீட்டை எல்லாம் சுத்திப் பார்த்தாச்சு, முக்கியமான இடத்தை மறந்து விட்டீர்களே என்கிறீர்களா. ஆத்திரத்தைகூட அடக்கி விடலாம், இதை அடக்க முடியுமா. அடுத்து பாத்ரூம் டூர் தான். பாத்ரூமிலும் அதிரடியாக உள் அலங்காரத்தை மாற்றி இருக்கின்றனர். தண்ணீர் லாரியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் வருவது போல், வாஷ் பேஷன் டிசைன் உள்ளது.

    தண்ணீர் லாரி மாடல்:

    தண்ணீர் லாரி மாடல்:

    பாத்ரூம் வாசலில் நமக்கு முந்திக் கொண்டு ஒருவர் வாளியில் நிற்கிறார் ஓவியமாக. இன்னொரு பாத்ரூம் வாசலில் பெண் ஒருவர் தலையில் பானையோடு தண்ணீர் கொண்டு செல்கிறார். அமர்ந்து பேசும் இருக்கை இம்முறை இடம் மாறி இருக்கிறது. இந்த டிசைனை எல்லாம் பார்க்கும் போது, நிச்சயம் அதனை வடிவமைத்தவர் சென்னை தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கி சின்னாபின்னமானவராகத் தான் இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. அந்தளவிற்கு பீல் பண்ணி டிசைன் செய்திருக்கிறார்கள்.

    English summary
    While visiting the bigg boss house, we have noticed lots of changes in the inside and outside the living area.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X