நை, நைன்னு பேசிய மீரா மிதுன், கடுப்பில் கிளம்பிய லாஸ்லியா: பரபரக்குதாம் பிக் பாஸ்
Recommended Video
சென்னை: மீரா மிதுன் லாஸ்லியாவை வம்புக்கு இழுக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 3 வீட்டிற்கு முதல் ஆளாக வந்த பாத்திமா பாபு முதல் ஆளாக நேற்று வெளியேற்றப்பட்டார். அவரை வெளியேற்றியதால் அதிகம் கவலைப்படப் போவது பாவம் தர்ஷன் தான். பாத்திமாவை தன் அம்மாவாக பார்த்தார் அவர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோவில் மீரா மிதுன் லாஸ்லியாவை வம்புக்கு இழுக்கிறார்.
இருப்பினும் ப்ரொமோ வீடியோவை வைத்து எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது.
லாஸ்லியா
மீரா மிதுன் லாஸ்லியாவை பார்த்து நான் உங்களை தோழியாக நினைத்தது என் தப்பு தான் என்று ப்ரொமோ வீடியோவில் கூறியுள்ளார். அதை கேட்ட லாஸ்லியாவோ எனக்கு அனைவருமே நண்பர்கள் தான் என்கிறார். மேலும் மதுமிதா விஷயத்தில் மீரா நடந்து கொண்டது சரியில்லை என்று லாஸ்லியா கூறிவிட்டு இடத்தை காலி செய்கிறார்.
எரிச்சல்
மீரா மிதுன் மதுமிதாவுடன் நெருங்கிப் பழகிவிட்டு ஒரு நிமிடத்தில் அவருக்கு எதிராக திரும்பியது சக போட்டியாளர்களுக்கு மட்டும் அல்ல பார்வையாளர்களுக்கும் பிடிக்கவில்லை. இந்நிலையில் லாஸ்லியா அதை மீராவிடம் நேரடியாக தெரிவித்துவிட்டு நடையை கட்டியது பார்வையாளர்களுக்கு பிடித்துள்ளது. மேலும் மீராவை பார்த்தாலே பார்வையாளர்களுக்கு எரிச்சல் வருகிறது.
வெளியேற்றம்
மீரா மிதுன் எதற்கெடுத்தாலும் நீலிக் கண்ணீர் வடிப்பது பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பிக் பாஸ் இந்த மீரா மிதுனை பார்க்க பார்க்க கடுப்பாகிறது. தயவு செய்து இந்த வாரம் அவரை வெளியேற்றுங்கள் என்கிறார்கள். அது எப்படி பாஸ், மீராவை அனுப்புவார்கள்?. வாய்ப்பில்ல ராஜா.
நடிப்பு
மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் நீ தான் என் பிரெண்டுன்னு நினைச்சேன் என்று பிட்டை போடுவதை பார்க்க சகிக்கவில்லை. மீரா தான் பிக் பாஸ் வீட்டின் அடுத்த ஜூலி. முதலில் அவரை விரட்டிவிட்டுட்டு மறு வேலையை பாருங்க பிக் பாஸ் என்கிறார்கள் பார்வையாளர்கள்.


Click it and Unblock the Notifications











