Just In
- 37 min ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
- 51 min ago
டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!
- 57 min ago
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!
- 3 hrs ago
அக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்!
Don't Miss!
- News
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்... 2 தொகுதியில் போட்டி... மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு
- Sports
ரெய்னாவுக்கு இந்த நிலைமையா? சிஎஸ்கே மட்டுமில்லை.. மற்ற அணிகளும் ஏலம் கேட்க தயக்கம்.. பரபர தகவல்!
- Lifestyle
நீங்க தினமும் குடிக்கிற இந்த பானங்களாலதான் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையே வருதாம் தெரியுமா?
- Finance
முகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அட லாஸ்லியா ஆர்மில யாரெல்லாம் இருக்காங்க பாருங்க.. கெத்து காட்டும் ரசிகர்கள் !
சென்னை: காமெடி நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றால் லாஸ்லியா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளவர் இலங்கை டிவி செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. நிகழ்ச்சிக்கு வந்த நாள் முதலே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் அவர். அவருக்கென ஒரு ஆர்மியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதிக சர்ச்சைகளில் சிக்காமல் வீட்டில் குறும்புகள் செய்து கொண்டு ஜாலியாக சுற்றி வரும் அவரது நடவடிக்கைகள் மக்களை அதிகம் கவர்ந்துள்ளது. அவரது சோகக் கதை கேட்டு மக்கள் அதிகம் பரிதாபப்பட்டனர்.

லாஸ்லியா:
இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் சதிஷ் லாஸ்லியா ஆர்மி பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘கடினமான போட்டி இளைஞர்களே' என அந்த வீடியோ பற்றி சதீஷ் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், அதில் அவர், கிராமத்து முதியவர் ஒருவரிடம், ‘உங்கள் கிரஷ் யாரு?' எனக் கேட்கிறார். அதற்கு அந்த தாத்தா லாஸ்லியா எனக் கூறுகிறார்.

நெட்டிசன்கள்:
பாருங்க லாஸ்லியா ஆர்மில யார்லாம் இருக்காங்கனு என ஆச்சர்யத்துடன் இந்த வீடியோவை சதீஷ் வெளியிட்டுள்ளார். ஆனால், இது உண்மையில்லை, சதீஷ் தான் தன் மனதில் உள்ளதை அந்த தாத்தாவை வைத்து சொல்ல வைத்துள்ளார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பாவம் அந்த தாத்தா எனப் பரிதாபப்பட்டுள்ளனர்.

ரசிகர்கள் மகிழ்ச்சி:
எது எப்படியோ லாஸ்லியா பற்றி அந்தத் தாத்தா பேசியிருப்பது லாஸ்லியா ஆர்மியை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. லாஸ்லியாவுக்கு தமிழகத்தில் எல்லா வயதிலும் ரசிகர்கள் உள்ளனர் என கெத்தாக அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். அதோடு லாஸ்லியாவின் புகைப்படங்களையும் அவர்கள் ஷேர் செய்து உள்ளனர்.
|
இந்த சீசன் ஓவியா:
முதல் சீசனில் ஓவியா பிரபலமானதைப் போன்று இந்த சீசனில் லாஸ்லியாவுக்கு நல்ல பெயர் கிடைத்து வருகிறது. பிக் பாஸ் வீட்டில் அவர் பேசும் டயலாக்குகளை, டிக் டாக் செய்து ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர். லாஸ்லியா கண்ணீரோடு பேசியதைக் கூட டிக் டாக் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.