For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சேரனின் இந்த அவமானத்திற்கு காரணம் சரவணன் மட்டுமில்ல.. நாமதான் என்றால் ஏற்று கொள்வீர்களா மக்களே?

  |

  சென்னை: சேரன் இப்படி பிக் பாஸ் வீட்டிற்கு சென்று, பல்வேறு அவமானங்களைச் சந்திக்க சக போட்டியாளர்களான மீராவோ, சரவணனோ, ரேஷ்மாவோ இல்லை. தமிழ் சினிமா ரசிகர்களாகிய நாம் தான் என்றால் உங்களால் ஜீரணிக்க முடியுமா?

  பிக் பாஸ் நிகழ்ச்சியில பொதுவாக பட வாய்ப்புகள் இல்லாத, மக்களிடம் பிரபலம் ஆக விரும்பும் போட்டியாளர்கள் தான் கலந்து கொள்வர். இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் ஆதரவை வைத்து சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்பது தான் பெரும்பாலான போட்டியாளர்களின் குறிக்கோளே.

  ஆனால் இம்முறை தமிழ் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சேரன் ஒரு போட்டியாளர் ஆனது பலருக்கும் ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.

  "விஜய்சேதுபதியுடன் நடிப்பது ரொம்ப கஷ்டம்ங்க".. மேடையிலேயே ஓப்பனாகக் கூறிய மணிரத்னம் பட நாயகி!

  இமேஜ்:

  இமேஜ்:

  காரணம் தனது போட்டியாளர்கள் மீது நல்ல அல்லது கெட்ட இமேஜை உருவாக்குவது பிக் பாஸ் தான். வெளியில் நல்ல பெயருடன் இருக்கும் பலரது முகமூடியை கிழிக்கிறேன் பேர்வழி என பிக் பாஸ் சமயங்களில் கெட்ட பெயரை ஏற்படுத்தியிருக்கிறார். இப்படி பிக் பாஸால் நல்ல பெயரை வாங்கியவர்களை விட கெட்ட பேர் வாங்கியவர்கள் அதிகம்.

  மீராவின் புகார்:

  மீராவின் புகார்:

  எனவே, வெளியில் சம்பாதித்த நல்ல பெயரை சேரனும் கெடுத்துக் கொள்வாரோ என்ற பயம் அவரது ரசிகர்களுக்கு இருந்தது. அதனை உறுதி செய்வது போல், கடந்த வாரம் மீரா அவர் மீது பாலியல் புகார் கூறினார். வீட்டை விட்டு வெளியில் வந்த பிறகும்கூட அவர் சேரன் பற்றி பல அவதூறான கருத்துக்களைத் தான் கூறி வருகிறார்.

  சரவணன்:

  சரவணன்:

  இந்நிலையில், நேற்று சரவணனுக்கும், சேரனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அதில் சேரன் நிதானத்தைக் கடைபிடித்த போதும், சரவணன் ஆவேசமாக பேசினார். இது பலரையும் எரிச்சல் அடைய வைத்தது. தன் முன் பகையை அவர் நினைவு கூர்ந்ததும் மக்களிடையே கோபத்தை உண்டாக்கியது.

  கமல் சாட்டையடி:

  கமல் சாட்டையடி:

  சமூகவலைதளங்களில் இது தொடர்பாக கடும் விவாவதங்கள் எழுந்தன. சேரனுக்கு ஆதரவாகவும், மீரா மற்றும் சரவணனுக்கு எதிராகவும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்தனர். கமலும்கூட கடந்த இரண்டு வாரங்களாக சேரனுக்கு ஆதரவாகப் பேசி, சம்பந்தப்பட்டவர்களுக்கு சரியான சாட்டையடி கொடுத்து வருகிறார்.

  நாம் தான்:

  நாம் தான்:

  ஆனால், இதனால் எல்லாம் சேரன் பட்ட அவமானங்கள் சரியாகி விடாது. காரணம் சேரனின் இந்த நிலைக்கும், அவர் படும் அவமானங்களுக்கும் சரவணனோ, மீராவோ மட்டும் காரணம் அல்ல. வேறு யார் பிக் பாஸ் தானே என நீங்கள் கேட்கலாம். இல்லை, நாம் தான் எனச் சொன்னால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

  திருமணம்:

  திருமணம்:

  ஒரு நல்ல கலைஞனை, அவரது நல்ல படைப்புகளை அங்கீகரிக்கத் தவறியதன் விளைவு தான் சேரனின் இந்த நிலைக்கு காரணம். சமீபகாலமாக மக்களின் ரசனை இருட்டு அறை சம்பந்தப்பட்ட படங்களுக்குத் தான் அமோகமாக இருக்கிறது. இதனாலேயே சேரனின் திருமணம் போன்ற படங்களை மக்கள் கவனித்து, ஆதரவு தர மறந்து விட்டனர்.

  பதில் சொல்லுங்கள்:

  பதில் சொல்லுங்கள்:

  அவருக்கு, அவரது படங்களுக்கு உரிய அங்கீகாரத்தை நாம் தந்திருந்தோமேயானால், இப்படி ஒரு நிலைக்கு அவர் தள்ளப் பட்டிருக்க மாட்டார். இப்போது சேரன் ஏன் பிக் பாஸுக்கு போனார் என வருத்தப் படுபவர்களில் எத்தனைப் பேர், அவரது திருமணம் படத்தை தியேட்டருக்குச் சென்று பார்த்திருப்பார்கள்?

  விழித்துக் கொள்வோம்:

  விழித்துக் கொள்வோம்:

  நண்டு தின்னும் ஊரில் நடுத்துண்டு எனக்கு என காலத்திற்கு தகுந்தபடி தன் தரத்தை குறைத்துக் கொள்ளாமல், படம் எடுப்பவர்களுக்கு நாம் உரிய காலத்தில் மரியாதை தர தவறினால், எதிர்காலத்திலும் இது போன்று சேரன்கள் பிக் பாஸ் வீட்டில் அவமானப் படுவதை தடுக்க முடியாது. இனியாவது மக்கள் விழித்துக் கொண்டு சேரன்களைக் காப்பாற்றுவார்களா?

  English summary
  If the audience would have respected and celebrated Director Cheran's all films, then he would have not come to situation to participate in a program like bigg boss.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X