For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  “அவளுக்கு ஒரு ஆம்பளை பத்தாது.. செருப்பால அடிக்கணும்..” வனிதா பற்றி அசிங்கமாக விமர்சித்த எக்ஸ் லவ்வர்

  |
  Bigg Boss 3 Tamil : Unseen : Kasthuri-யை வம்புக்கு இழுக்கும் Vanitha- வீடியோ

  சென்னை: வனிதா விஜயகுமார் பற்றியும், அவரது காதல்கள் பற்றியும் மிக மோசமாக விமர்சித்து பேட்டியளித்துள்ளார் அவரது முன்னாள் காதலரான டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்.

  வனிதா விஜயகுமார் என்ற பெயரை மாற்றி, பிக் பாஸ் வனிதா என்றால் தான் அனைவருக்கும் அடையாளம் தெரியும் போல. அந்தளவிற்கு பிக் பாஸ் வீட்டில் அல்லி ராணி ராஜ்ஜியம் நடத்தி வருகிறார் வனிதா.

  'ஒரு பத்து நிமிசம் பிக் பாஸ் வீட்டுக் கதவைத் திறந்து வைக்கச் சொல்றேன்' என பிக் பாஸும், கமலுமே தன் சொல்படி தான் கேட்பார்கள் எனச் சொல்லும் அளவிற்கு பிக் பாஸ் வீட்டில் தனக்கு உரிமை இருப்பதாக காட்டி வருகிறார் வனிதா.

  பக்ரீத் பாடல்களை முடக்கிய ஸ்டார் மியூசிக் - டெக்னிகல் ப்ராப்ளமாம் பக்ரீத் பாடல்களை முடக்கிய ஸ்டார் மியூசிக் - டெக்னிகல் ப்ராப்ளமாம்

  சர்ச்சை நாயகி

  சர்ச்சை நாயகி

  பிக் பாஸ் வீட்டிற்கு முன்னதாகவே வனிதாவைப் பற்றி மக்களுக்கு மிகவும் பரிச்சயம். காரணம், அவர் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியது தான். அவற்றில் ஒன்று தான், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடனான காதல். இருவரும் சேர்ந்து படமொன்றைத் தயாரித்தனர். அப்போது காதலில் விழுந்ததாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வனிதா தெரிவித்திருந்தார்.

  ராபர்ட் மறுப்பு

  ராபர்ட் மறுப்பு

  ஆனால், அதனை சமீபத்தில் ராபர்ட் மறுத்திருந்தார். வனிதா தன் பட விளம்பரத்திற்காக தன் பெயரை அப்படிப் பயன்படுத்திக் கொண்டதாக பேட்டியொன்றில் அவர் தெரிவித்திருந்தார். அப்போது அவர் கையில் வனிதா என டாட்டூ குத்தியிருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. காதல் இல்லாமல் ஏன் இப்படி வனிதா பெயரை டாட்டூ குத்தினார் ராபர்ட் என்ற கேள்வி எழுந்தது.

  கணவர்கள்

  கணவர்கள்

  இந்நிலையில், இது தொடர்பாக ராபர்ட் தற்போது மீண்டும் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக பேட்டியொன்றில் பேசியுள்ள அவர், "வனிதாவிற்கு ஒரு ஆம்பிளை பத்தாது. உடை மாற்றுவது மாதிரி அவர் ஆண்களை மாற்றிக் கொண்டே இருப்பார். அவருக்கு ஐந்தாறு காதலர்கள் உள்ளனர். முதல் கணவர், இரண்டாவது கணவர் என குறிப்பிடுவது தனக்கு கிடைத்த விருதுகள் போல பெருமையாக அவர் கருதுகிறார்.

  க்ரஷ் இருந்தது

  க்ரஷ் இருந்தது

  எனக்கும் ஒரு சமயத்தில் அவர் மீது க்ரஷ் இருந்தது உண்மைதான். ஆனால், நானே நேரடியாக அவர் செய்த சில அசிங்கமான விசயங்களைக் கண்கூடாகப் பார்த்தேன். அதன் பிறகும் எப்படி அவரைத் திருமணம் செய்து கொள்வேன். அவர் எல்லாம் பெண்ணே கிடையாது. வனிதாவை செருப்பால் தான் அடிக்க வேண்டும்.

  காரித் துப்புவார்கள்

  காரித் துப்புவார்கள்

  என் பெற்றோருடன் நல்ல பழக்கம் இருப்பதாகக் கூறி வருகிறார். இதை அவர்களிடம் கேட்டுப் பாருங்கள் காரித் துப்புவார்கள். இருப்பதிலேயே கேவலமான பெண் வனிதா தான். அவருடன் பழகிய இரண்டு மாதத்திலேயே அவரது சுயரூபம் எனக்குத் தெரிந்து விட்டது" என கோபமாக ராபர்ட் தெரிவித்துள்ளார்.

  லாஸ்லியா

  லாஸ்லியா

  அதோடு, நன்றாக இருந்த பிக் பாஸ் வீடு வனிதாவின் வருகைக்குப் பிறகு சுனாமி தாக்கியது போல் ஆகிவிட்டதாகவும், அவருக்கு பிடிக்காத போட்டியாளர் லாஸ்லியா தான் என்றும் ராபர்ட் கூறியுள்ளார். மக்கள் வாக்களித்து வெளியேற்றிய வனிதாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக கொண்டு வந்தது தவறு. அப்படியென்றால் மக்களின் வாக்குகளுக்கு என்ன மரியாதை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

  English summary
  In a recent interview dancemaster Robert badly criticised Biggboss 3 tamil contestant Vanitha.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X