மீண்டும் விக்ரமனிடம் வரம்பு மீறும் அசீம்… இந்த வாரம் ரெட் கார்டு கன்ஃபார்ம் தான்

சென்னை: முதல் வாரத்தில் இருந்தே பிக் பாஸ் வீட்டில் தான் வைப்பது சட்டம் என்ற தொனியில் விளையாடி வருகிறார் அசீம்.

பிக் பாஸ் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு டாஸ்க்கிலும் சக போட்டியாளர்கள் யாரையாவது வம்பிழுப்பதையே குறியாக வைத்து அசீம் விளையாடுகிறார்.

ஏற்கனவே இரண்டு முறை எச்சரிக்கப்பட்டும் இன்று விக்ரமனுடன் மிக மோசமாக சண்டை போட்ட அசீமை நெட்டிசன்கள் கண்டித்துள்ளனர்.

வந்ததில் இருந்து சண்டை தான்

வந்ததில் இருந்து சண்டை தான்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, கடந்த மாதம் 9ம் தேதி முதல் தொடங்கியது. பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், ஆரம்பத்தில் இருந்தே சீரியல் நடிகர் அசீம் எல்ல மீறி நடந்து வருகிறார். சக போட்டியாளர்களை எதற்கும் பேச அனுமதிக்காமல் சத்தமிடுவதும் சண்டை போடுவதும் அல்லது இமிடேட் செய்வதும் மட்டுமே அவரது முழுநேர வேலையாக உள்ளது. முதல் வாரத்தில் ஆயிஷாவுடன் அசீம் சண்டை போட, அதை விக்ரமன் தட்டிக் கேட்டார். அன்று முதல் விக்ரமனுடன் வம்பிழுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் அசீம்.

மீண்டும் விக்ரமனுடன் மோதல்

மீண்டும் விக்ரமனுடன் மோதல்

அசீம் - விக்ரமன் சண்டை விவகாரம் கமல்ஹாசன் வரை பஞ்சாயத்துக்கு சென்றது. தொடர்ச்சியாக அசீம் அப்படி நடந்துகொண்டே இருந்தது ஹவுஸ் மேட்ஸ் உட்பட ரசிகர்களையும் ரொம்பவே எரிச்சலடைய வைத்தது. இதனால், அசீமை கமல் கடுமையாக வார்னிங் செய்து மன்னித்துவிட்டார். அதன் பின்னர் ஆயிஷா, விக்ரமனிடம் நட்பாக பேசினாலும், அவ்வப்போது சண்டை போடுவது தொடர்கதையாகி வந்தது. இந்நிலையில், இன்றைய ராஜா - ராணி டாஸ்க்கில் எச்சைதுப்பி சாப்பாடு தந்தால் சாப்பிடுவியா என விக்ரமனிடம் வம்பிழுத்தார் அசீம். இதனால், கடுப்பான விக்ரமன் அசீமிடம் சண்டைக்கு சென்றார்.

யார் கொடுத்த அதிகாரம்

யார் கொடுத்த அதிகாரம்

இப்படி அநாகரிகமாக பேசும் அளவிற்கு அசீமிற்கு யார் அதிகாரம் கொடுத்தது என விக்ரமன் கொதித்துவிட்டார். அதேபோல், அசீமின் இந்த அத்துமீறலை யாருமே கேட்க மாட்டீங்களா எனவும் சக போட்டியாளர்களை துணைக்கு அழைத்தார். ஆனால், யாரும் இதை கண்டுகொண்டதாக தெரியவில்லை. அப்போது விக்ரமனை மரியாதை இல்லாம் அவன் இவன் என ஒருமையில் பேசியது சண்டையை இன்னும் அதிகமாக்கியது. ஆனால், திரும்பவும் விக்ரமனிடம் அத்துமீறி பேசிய அசீம், ஒருகட்டத்தில் அவரை அடிக்கப் போவதை போல பாய்ந்தார். அதேபோல், ஷிவினிடம் வம்பிழுத்தார் அசீம்.

ரெட் கார்டு கொடுக்கப்படுமா?

ரெட் கார்டு கொடுக்கப்படுமா?

பிக் பாஸ் வீட்டில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என தெரியாமல், அசீம் தொடர்ந்து எல்லை மீறி வருவதை நெட்டிசன்கள் கண்டித்துள்ளனர். அடிச்சும் பார்த்தாச்சு அதட்டியும் பார்த்தாச்சு அசீம் திருந்துவதாக தெரியவில்லை. இதனால், இந்த வாரம் கமல்ஹாசன் அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேபோல், பிக் பாஸ் வீட்டுக்குள் பேச தெரியாத போட்டியாளர்களை எல்லாம் அனுமதித்து, விஜய் டிவி தனது டிஆர்பியை ஏற்றி ஆதாயம் பார்த்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர். நெட்டிசன்களின் கோரிக்கையை ஏற்று, அசீம்க்கு கமல் ரெட் கார்டு கொடுப்பாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X