For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வாம்மா மின்னல்.. குட்டி ஸ்டோரி பாட்டோட கம்மியா.. போன வேகத்தில் திரும்பிய ஷிவானி.. அப்போ இவரும்?

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் நான்காம் நாள் எபிசோடில் நடிகை ஷிவானி நாராயணன் தனது கதையை குட்டி ஸ்டோரி பாடலை விட குறைவான நேரத்தில் சொல்லி முடித்துள்ளார்.

  யார் captain?தலையில் அடித்து கொண்ட Sanam Shetty | Promo 1

  சீரியல் நடிகையான ஷிவானி நாராயணன் தான் இந்த பிக் பாஸ் வீட்டின் இளம் போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

  அதே போல, அவருடைய கதையும் ரொம்ப சின்னதாக சிம்பிளாக இருந்ததை பார்த்த ஹவுஸ் மேட்ஸ் அவரை அந்த இடத்திலேயே செமையா கலாய்த்துத் தள்ளினர்.

  ஒய் பிளட்.. சேம் பிளட்.. ஒன்னும் புரியல.. அனிதா சம்பத் ஸ்டோரி ரிஜெக்டட்.. கதறும் நெட்டிசன்ஸ்!

  மற்ற போட்டியாளர்கள் மாதிரி

  மற்ற போட்டியாளர்கள் மாதிரி

  என் குழந்தைக்கு அப்படி ஆக்ஸிடன்ட் ஆச்சு, நான் இப்படி கஷ்டப்பட்டேன் என போட்டியாளர்களையும், பார்வையாளர்களையும் அழ வைக்கும் அளவுக்கு மற்ற போட்டியாளர்கள் கதை சொன்ன நிலையில், ஷிவானி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா சில செகண்டில் தன் ஸ்டோரியை முடித்து விட்டார்.

  சின்னத்திரை நடிகை

  சின்னத்திரை நடிகை

  பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை ஷிவானி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஹாட் கன்டஸ்ட்டன்ட் ஆக பங்கேற்றுள்ளார். இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கும் மேல் ரசிகர்களை கொண்டுள்ள இவர், அவங்களாம் எப்படியாவது ஓட்டு போட்டுத் தன்னை ஜெயிக்க வைத்து விடுவார்கள் என்கிற நம்பிக்கையுடன் விளையாடி வருகிறார்.

  முதல் நாளே கார்னர் செய்யப்பட்டார்

  முதல் நாளே கார்னர் செய்யப்பட்டார்

  அழகாக பாடி அசத்தும் ஷிவானி நாராயணனை வந்ததும் வராததுமாக ஹவுஸ்மேட்ஸ்கள் பலரும் அவரது கையில் எக்கச்சக்க புரோக்கன் ஹார்ட்களை குத்தி அவரது ரசிகர்களின் இதயங்களை நொறுக்கினர். ஷிவானி நாராயணனை கார்னர் செய்த மொட்டை தல சுரேஷை ரசிகர்கள் திட்டித் தீர்த்தது வேறு கதை.

  அப்படி என்ன கதை

  அப்படி என்ன கதை

  இந்நிலையில், நான்காம் நாள் எபிசோடில் தனது கதையை சொல்ல மேடை ஏறிய ஷிவானி நாராயணன், வாம்மா மின்னல்.. என்பது போல வந்த வேகத்தில் மேடையில் இருந்து இறங்கி சென்றார். சாத்தூரில் பிறந்தேன் சென்னைக்கு வந்தோம்.. எனக்கு எங்கம்மா நல்ல சுதந்திரம் கொடுத்தாங்க, சமூக வலைதளங்களை பயன்படுத்தினேன், சீரியலில் நடித்தேன், இப்போ பிக் பாஸ் வீட்டுக்கு வந்துருக்கேன். இது தான் என் கதையை என மாற்றவர்களின் கதையை முடித்து விட்டார்.

  குட்டி ஸ்டோரியை விட கம்மி

  குட்டி ஸ்டோரியை விட கம்மி

  ஷிவானி நாராயணன் அப்படியே ரசிகர்களையும் போட்டியாளர்களையும் அழ வைக்கப் போகிறார் என பார்த்தால், இப்படி குட்டி ஸ்டோரி பாட்டு கூட முடிந்திருக்காது அந்த அளவுக்கு சின்ன ஸ்டோரியை சொல்லிட்டு போய்ட்டீயேம்மா என பாலாஜி கலாய்க்க, அறந்தாங்கி நிஷா, இதை புரமோவில் எப்படி போட்டுருப்பாங்க தெரியுமா? இப்போ பார்த்தா.. அவ்ளோ தானா என கழுவி ஊத்துவாங்க என்றார்.

  எவிக்‌ஷன் லிஸ்டில்

  எவிக்‌ஷன் லிஸ்டில்

  சனம் ஷெட்டியின் கதையையே பாலாஜி முருகதாஸ் கண்டு கொள்ளாத நிலையில், ஷிவானி நாராயணன் அடுத்த 4 எவிக்‌ஷன் போட்டியாளர்கள் பட்டியலில் நிச்சயம் இடம்பெறுவார் என்பது உறுதியாகி உள்ளது. அது குறித்த புரமோ வருகிறதா? இல்லை நிகழ்ச்சியில் சொல்றாங்களா? பார்க்கலாம்,

  English summary
  Bigg Boss Tamil 4 housemates trolls Shivani Narayanan’s Kutti Story on stage. She narrates a simple and powerless story of her.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X