Don't Miss!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Technology
டிஜிட்டல் கேமராவுக்கு குட்பை! 200MP கேமரா உடன் அறிமுகமான Galaxy S23 Ultra! Galaxy S23+ எப்படி?
- News
அரசுப் பள்ளி மாணவர்கள் கழிப்பறை சுத்தம் செய்யும் அவலம்.. அமைச்சர் என்ன செய்கிறார்?- அண்ணாமலை தாக்கு!
- Finance
அடுத்த அதிரடி.. அதானி குழுமம் வாங்கிய கடன் எவ்வளவு? வங்கிகளிடம் கேட்கிறது ஆர்பிஐ..!!
- Lifestyle
இரத்த அழுத்தம் & இதய நோய் ஆபத்தை ஏற்படுத்தும் உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க இந்த உணவுகள் போதுமாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
‘கிஸ்‘ பண்ணும்போது பாவனி ஏன் கோவப்படல… இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது… கடுப்பான அமீர் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்துள்ளது. இதில் அனைவரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு டைட்டில் வின்னர் ஆனார். இரண்டாவது இடத்தை பிரியங்கா, மூன்றாவது இடத்தை பவானி ரெட்டி, நான்காம் இடத்தை அமீர் பிடித்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்துள்ள நிலையில், அமீர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், பிரியாங்கா, ராஜூ உடனான நட்பு குறித்தும், பாவனி மீதான காதல் குறித்தும் அமீர் மனம் திறந்து பேசி உள்ளார்.
20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சிவகார்த்திகேயனின் ஜலபுல ஜங் பாடல் சாதனை!

அமீர்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் போட்டியாளராக உள்ளே வந்தார் அமீர். வீட்டுக்குள் நுழைந்த சில நாட்களிலே அமீர் காதல் புரோமோவிலும் இடம் பிடித்து விட்டார். இவர் பாவனியுடன் செய்யும் குரும்புகள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்ட்டாகின.

எரிச்சலான ரசிகர்கள்
அமீர் தனது வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டத்தையும், 16வது வயது இருக்கும் போது, அவரின் அம்மா யாரோ ஒருவரால் கொலை செய்யப்பட்டார் என்றும், அம்மாவின் உடலை அடக்கம் செய்யக்கூட காசில்லாமல், அமீர் பட்ட வேதனைகளை கேட்டு பலரும் கண்ணீர் வடித்தனர். இளவயதில் அமீர் இவ்வளவு கொடுமைகளை அனுபவித்தாலும், பிக்பாஸ் வீட்டில் அவர் பாவனியிடம் நடந்து கொண்டது ரசிகர்களை எரிச்சலடையச் செய்தது. குறிப்பாக பாவனிக்கு முத்தம் கொடுத்த விவகாரம் சோஷியல் மீடியாவில் பேசுப் பொருளாகவே மாறியது.

வெளியில் காட்டவில்லை
இந்நிலையில்,ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அமீர், நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு முன்பு ரொம்ப டீபா இந்த நிகழ்ச்சியை பார்க்கவில்லை. மேலோட்டமாகத்தான் பார்த்தேன். நான் உள்ளே போனதும் அதிகம் பேசியது ராஜூவிடம் தான் , ஆனால் அது வெளியில் காட்டப்படவில்லை. பாவனியிடம் பேசியது மட்டுமே அதிகமாக காட்டப்பட்டுள்ளது என்றார்.

பாவனியை காதலிக்கிறேன்
பாவனி எப்போதும் தனியாகவே இருப்பார், ஏதோ ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டு அழுதுக்கொண்டே இருப்பார். அவரைப் பார்ப்பதற்கே பாவமாக இருக்கும். அதனால் அவரிடம் நான் அதிகம் பேசினேன். அப்படித்தான் எங்கள் இருவருக்கும் நட்பு உண்டானது. அதன் பிறகு நான் பாவனி காதலிப்பதாக சொல்லினேன். ஆனால், அவர் நட்பாக இருக்கலாம் என்று சொன்னார். அது அவருடைய விருப்பம். நான் என்னுடைய விருப்பத்தை நிகழ்ச்சியில் இருக்கும் போதே சொல்லிவிட்டேன் என்றார்.

பதிலளிக்க மறுத்த அமீர்
பாவனிக்கு முத்தம் கொடுத்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அமீர், பிக் பாஸ் பற்றி கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கு, 50 நாள் கழித்து பிக் பாஸ் வீட்டிற்குள் போனேன், டாஸ்கை சிறப்பாக செய்தேன், நேரடியாக பைனலுக்கு தேர்வானேன் இதைப்பற்றி எல்லாம் பேசாமல், மீண்டும் மீண்டும் பாவனியை பற்றி கேட்டால், என்னால் பதிலளிக்க முடியாது என அமீர் கூறினார்.