ஆமாம் நான் எக்ஸ் தான்...இதுல என்ன அசிங்கம்...யாஷிகா பற்றி ஓப்பனாக பேசிய நிரூப்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ன் பதினோறாம் நாளான இன்று, மதுமிதாவிற்கு டபிள் மீனிங் பாடல்களை பாட கற்றுக் கொடுத்து, அதற்கு அர்த்தகங்களையும் கூறி ஹவுஸ்மெட்கள் விளக்கம் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து போட்டியாளர்கள் கதையை தொடர்ந்தனர்.

இதில் இன்று நிரூப் தனது கதையை கூறினார். அவர் பேசுகையில், பிக்பாஸ் சீசன் 3 பிரபலமான யாஷிகா ஆனந்த் பற்றி ஓப்பனாக பேசினார். நிரூப், யாஜிக்காவின் முன்னாள் காதலர் என சோஷியல் மீடியாக்களில் வெளியான தகவல்களை ஆம் என ஓப்பனாக ஒப்குக் கொண்ட நிரூப், அதற்கு விளக்கமும் தெரிவித்தார்.

கதை சொன்ன நிரூப்

கதை சொன்ன நிரூப்

நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை தான். நான் ஒன்பதாம் வகுப்பு படித்த போது முதல் முறையாக என் வாழ்க்கையில் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. எங்க அம்மாவுக்கு மூளை சம்பந்தமான நோய் இருப்பது அப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என அவருக்கே தெரியாது. உலகமே அவருக்கு எதிராக இருப்பதாக நினைத்தார். இதனால் அந்த வருடம் முழுவதும் என்னால் படிக்க முடியவில்லை.

நான் சொன்ன பொய்

நான் சொன்ன பொய்

பத்தாம் வகுப்பு முடித்து விட்டு நேரடியாக டிப்ளமோ சேர்ந்து விட்டேன். அங்கு இருந்தவர்கள் அனைவரும் என்னை விட வயதில் பெரியவர்கள். சென்னை லோக்கல் தமிழில் பேசினார். அவர்களை பார்த்து பயந்தேன். இதனால் எனக்கு தமிழ் தெரியாது என பொய் சொல்லி விட்டேன். அவர்களும் நம்பி விட்டார்கள். தெலுங்கு, இங்கிலீஷ் மட்டும் தான் பேசுவேன் என நினைத்து விட்டார்கள்.

மனிதர்களை புரிந்து கொண்டேன்

மனிதர்களை புரிந்து கொண்டேன்

அவர்களுடன் பேச வேண்டாம் என நினைத்து பொய் சொன்னேன். அதனால் என் கூடவே இருந்து கொண்டு, என்னை பற்றி தவறாக பேசினார்கள். எனக்கு அது புரியும். கஷ்டமாக இருக்கும். ஆனால் என்னால் அதை காட்ட முடியாது. மூன்று வருடங்கள் இப்படியே கடந்து விட்டது. இப்போது வரை எனக்கு தமிழ் தெரியும் என அவர்களுக்கு தெரியாது. இது மனிதர்களை பற்றி புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருந்தது. இவ்வளவு நடந்தாலும் நான் டிப்ளமோவில் டிஷ்டிங்ஷன் வாங்கி பாஸ் செய்தேன்.

 யாஷிகாவோட எக்ஸ் தான்

யாஷிகாவோட எக்ஸ் தான்

பிடெக் படித்தேன். ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை. அது பற்றி அப்பாவிடம் கூறி விட்டு மாடலிங், ஆக்டிங் பண்ண போவதாக கூறினேன். ஆனால் எந்த கான்டாக்டும் கிடையாது. அப்போது தான் என் கேர்ஸ் ஃபிரண்டை சந்தித்தேன். அது தான் யாஷிகா ஆனந்த். அவளால் எனக்கு இந்த சான்ஸ் கிடைத்திருந்தாலும், அவள் எனக்கு ஃபிரண்டாக கிடைத்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். இதில் எனக்கு எந்த அசிங்கமும் கிடையாது. நான் இங்க நிற்க அவள் தான் காரணம்.

என்ன அசிங்கம் இருக்கு

என்ன அசிங்கம் இருக்கு

நிறைய பேர் என்னிடம் கேட்பார்கள். யாஷிகா பாய்பிரண்ட்னு போடுறாங்க. உன்னை யாஷிகாவின் எக்ஸ் லவ்வர் என போடுகிறார்கள் என்று. இது உனக்கு அசிங்கமா இல்லையா என கேட்பார்கள். இதில் என்ன அசிங்கம். அவள் தான் எனக்கு பாதை காட்டினாள். இதை ஏன் மக்கள் தவறாக நினைக்கிறீர்கள். ஒரு பொண்ணால் ஒரு பையன் வளர கூடாது. எத்தனையோ பெண்கள் பசங்களால வளரும் போது, ஒரு பையன் ஒரு பொண்ணால வளருறதுல என்ன அசிங்கம் இருக்கு.

இதுக்கு தான் நான் வந்தேன்

இதுக்கு தான் நான் வந்தேன்

நான் ஏன் பிக்பாஸிற்கு வந்தேன் என்றால், எனக்கு ஆக்டிங் என்றால் ரொம்ப பிடிக்கும். இதனால் கண்டிப்பாக எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்கும் என தெரியும். ஏற்கனவே நிறைய ஆடிசன் போய் இருக்கேன். என்னை பற்றி நிறைய அனுப்பி இருக்கேன். ஆனால் நான் உயரமாக இருக்கேன் என நிராகரித்து விடுவார்கள். இந்த நிகழ்ச்சியால் நிச்சயம் பெரிய உயரத்திற்கு போவேன் என தெரியும். அப்படி போனால் மட்டும் என்னால் 10 பேருக்கு உதவ முடியும். எங்க அப்பா அடிக்கடி சொல்லுவார் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று.

 அடுத்த அரவிந்த்சாமி

அடுத்த அரவிந்த்சாமி

நீங்க எப்படி போறீங்களோ அப்படி போய்டே இருங்க. கண்டிப்பா ஜெயிப்பீங்க என்று சொல்லி முடித்தார். யாஷிகா பற்றி நிரூப் பேசுகையில் பிரியங்கா, ஐ லவ் யூ என கத்தினார். நிரூப் தனது கதையை சொல்லி முடித்ததும், அடுத்த அரவிந்த் சாமி நீ தான் தம்பி என வாழ்த்தினார் இமான் அண்ணாச்சி. சோஃபா மீது ஏறி நின்று நிரூப்பை கட்டி பிடித்தார் பிரியங்கா. நிரூப்பின் கதையை கேட்டு விட்டு இருவர் ஹார்ட் கொடுத்தனர். ஒருவர் மட்டுமே லைக் கொடுத்தனர். 13 பேர் டிஸ்லைக் கொடுத்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X