100 வது நாளில் பிக்பாசாக மாறிய பிரியங்கா...வெளியேற்ற துடிக்கும் ராஜு
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று 100 வது நாளை எட்டி உள்ளது. இந்த வாரம் ஃபினாலே வாரம் என்பதால் பெரிதாக டாஸ்க் ஏதும் கொடுக்கப்படவில்லை. யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற டென்ஷன் அனைவரிடமும் இருப்பதால் போட்டியாளர்களை ஃபன் பண்ணும் விதமாக டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஃபினாலே வாரத்தின் முதல் நாளான நேற்று கோல்டன் மைக் டாஸ்க் வழங்கப்பட்டது. இதில் ஃபைனலிஸ்டான அமீர், பிரியங்கா, ராஜு, நிரூப், பாவனி ஆகிய ஐந்து பேரும் மக்களிடம் பேசி தங்களுக்காக ஓட்டுக் கேட்டனர்.

100 வது நாளில் பிக்பாஸ்
இந்நிலையில் 100 வது நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய டாஸ்க் பற்றி ராஜு வாசிக்கிறார். அதில் ஒரு நாள் பிக்பாஸ் டாஸ்க் என பெயரிடப்பட்டுள்ளது. பிக்பாஸ் உங்களை ஆட்கொள்வார். அப்படி ஆட்கொள்ளப்படும் நபர் பிக்பாசாக மாறி செயல்பட வேண்டும் என சொல்லப்படுகிறது.

பிக்பாசாக மாறிய பிரியங்கா
இந்த டாஸ்கில் முதல் நபராக பிரியங்கா, பிக்பாசாக மாறுகிறார். அனைவரும் தினமும் இரண்டு மணி நேரம் தூங்க அனுமதிக்கப்படுகிறது என கூறுகிறார். மற்றவர்கள் சிரிக்க, எல்லோரும் ஃபன் பண்ணுங்க என பிக்பாஸ் குரலில் சொல்கிறார் பிரியங்கா. பிரியங்காவை போல் மற்றவர்களும் பிக்பாசாக மாறி செயல்படுகிறார்கள்.

வெளியேற்ற துடிக்கும் ராஜு
ராஜு, பிக்பாசாக மாறும் போது, பிரியங்கா மெயின் டோர் வழியாக வெளியே வாங்க என சொல்கிறார். இதற்கு முன்பு, கடந்த வாரம் Dare- Sacrifice டாஸ்க்கின் போதும் வீட்டில் உள்ள அனைவரும் தலையில் தண்ணீர் ஊற்றி ஒருவரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற டாஸ்க்கின் போது, மற்றவர்கள் அமைதி காக்க, ராஜு தான் முதல் ஆளாக பிரியங்காவை கையை பிடித்து இழுந்து வந்து, தலையில் தண்ணீர் ஊற்றி வெளியே அனுப்புகிறேன் என்கிறார்.
Recommended Video

ராஜுவுக்கு என்ன கோபம்
தற்போதும், பிக்பாஸ் போல் வேறு எதையும் சொல்லாமல் பிரியங்காவை மட்டும் மெயின் டோர் வழியாக வெளியே வாருங்கள் என சொல்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், ராஜு ஏன் பிரியங்காவை மட்டும் குறிவைத்து நடந்து கொள்கிறார். பிரியங்காவை வெளியேற்றுவதிலேயே குறியாக இருக்கிறாரே. ஒருவேளை ராஜு, பிரியங்காவை மட்டும் தான் தனக்கு போட்டியாக கருதுகிறாரா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











