இறங்கின பஸ்லயே ஏத்தி விட்டுட்டாங்கப்பா...புலம்பும் பிக்பாஸ் பிரபலம் யாருன்னு பாருங்க
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொதுவாக பணப்பெட்டி வருவதற்கு முன்பே வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார்கள். ஆனால் இந்த முறை அப்படி வரவில்லை.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வெளியேறிய போட்டியாளர்களை விருந்தினர்களாக அழைக்கவில்லை என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். அதற்கு பதிலாக தான் ஃபைனலுக்கு சென்ற போட்டியாளர்களுடன் போனில் பேசினார்கள்.

மீண்டும் வந்த போட்டியாளர்கள்
இந்நிலையில் பிக்பாசில் இந்த வாரம் ஃபினாலே வாரம் என்பதால் போட்டியாளர்களும் மனம் திறந்து பேசி வருகிறார்கள். இதற்கிடையில் 101 வது நாள் எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் முதல் ப்ரோமோவில் சுருதி மற்றும் நாடியா சாங், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அனைவருக்கும் வாழ்த்து கூறுகிறார்கள்.

மறுபடியும் முதல இருந்தா
இரண்டாவது ப்ரோமோவில் சிபி மற்றும் அபினய் வருகின்றனர். வீட்டிற்குள் நுழையும் போதே அபினய், ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்து விட்டோம் என்கிறார். அதற்கு சிபி, இறங்கின பஸ்லயே என்னை ஏத்தி விட்டுட்டாங்க என்கிறார். இருவரும் ரேடியோ ஜாக்கி போல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள். இவர்களின் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து பிரியங்கா உள்ளிட்ட மற்ற போட்டியாளர்கள் வெளியே வருகிறார்கள்.

மிமிக்ரிக்கு டைட்டில் வின்னரா
இந்த ப்ரோமோவை பார்த்து விட்டு, ராஜு ஒரே ஒரு நாள் மிமிக்ரி பண்ணி 100 நாட்களுக்கு சேர்த்து டைட்டில் வின் பண்ண போறார். 100 நாட்கள் கன்டென்ட் கொடுத்த நிரூப், பிரியங்கா வெறும் ஃபைனலிஸ்ட்ஸா மட்டும் தான் இருக்க போறாங்க. பிரியங்கா தான் நேர்மையாக விளையாடுகிறார். ஏன் இந்த அபினய்யை கூப்பிட்டீங்க. சிபியை மட்டும் கூப்பிட்டிருக்க வேண்டியது தான. சிபியை மீண்டும் வீட்டிற்குள் பார்க்க சந்தோஷமாக இருக்கு என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.
Recommended Video

பிரியங்கா தான் தகுதியானவர்
டைட்டிலை வெல்ல பிரியங்கா தான் தகுதியானவர். பிரியங்காவிற்கு ஓட்டு போடுங்கள் என பிரியங்காவின் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஓட்டு கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











