அட...நம்ம ராஜு சொன்ன ஜமீன்கோட்டை கிழவியா இது...மெர்சலாகும் ரசிகர்கள்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஐந்தாவது வாரத்தை எட்டி உள்ளது. இதுவரை நான்கு பேர் வெளியேறி உள்ள நிலையில், தற்போது 14 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
கடந்த மூன்று வாரங்களாக நாட்டுப்புற பாடல்கள் பாடி அனைவரையும் மகிழ்வித்த சின்ன பொண்ணு, நான்காவது வார இறுதியில் எலிமினேஷன் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளார். அடுத்ததாக வெளியேற போகிறவரை தேர்வு செய்வதற்கான நாமினேஷன் நேற்று நடந்தது.

ராப் பாடகியான டாக்டர்
தற்போதுள்ள போட்டியாளர்களில் ஒருவரும், இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களில் ஒருவருமாக இருப்பவர் ஐக்கி பெர்ரி. உண்மையில் இவரது தொழில் டாக்டர் என்றாலும், இசையின் மீதான காதலால் ராப் பாடகி ஆனவர். பல தமிழ் பாடல்களை தானே எழுதி, ராப் இசையில் பாடி அனைவரையும் அசத்தி வருகிறார்.

ஐக்கியை கலாய்த்த ராஜு
வெள்ளை முடியுடன் இருப்பதால், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளே, ராஜு இவரை ஜமீன்கோட்டை படத்தில் வரும் சூனியக்கார கிழவி போலவே இருக்கிறார் என கமெண்ட் செய்தார். அதற்கு பிறகும் பலமுறை ஜமீன்கோட்டை கிழவி என கூறி கலாய்த்து வந்தார். இதை மற்ற ஹவுஸ்மெட்களும் ஒப்புக் கொண்டு, ரசித்து சிரித்து வருகிறார்கள்.

டை அடித்துக் கொண்ட ஐக்கி
ஆனால் ஐக்கி பெர்ரி இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை எல்லோரை போலவும் சாதாரணமாக கருப்பு நிற முடியுடன் தான் இருந்துள்ளார். அதற்கு பிறகு தான் தலைக்கு வெள்ளை நிற டை அடித்துக் கொண்டாராம். ஐக்கி பெர்ரி கருப்பு நிற முடியுடன் இருக்கும் பழைய அன்சீன் ஃபோட்டோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஆச்சரியத்தில் ரசிகர்கள்
மியூசிக் வீடியோக்களில் தோன்றி நடிக்க துவங்கிய பிறகே சோஷியல் மீடியாக்களிலும் ஐக்கி பிரபலமானார். இவர் உண்மையான தலைமுடி நிறத்துடன் இருக்கும் ஃபோட்டோவை பார்த்து விட்டு பலரும் ஆச்சரியப்பட்டு, லைக் செய்து வருகிறார்கள். அதிலும் இவர் தஞ்சாவூர்கார தமிழ் பெண் என்பதால் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

ஏன் வெள்ளை டை
ஐக்கி பெர்ரியின் இந்த த்ரோபேக் ஃபோட்டோவை பார்த்து விட்டு பலரும், ராஜு ஸ்டைலில் ஜமீன்கோட்டை கிழவியா இது என ஆச்சரித்துடன் கேட்டு வருகிறார்கள். இன்னும் சிலர் ஒரிஜினல் முடியுடனேயே இவ்வளவு அழகாக தானே இருக்கார். பிறகு ஏன் டை அடித்துக் கொண்டார் என கேட்டுள்ளனர். இன்னும் சிலர் இங்க வெள்ளை முடியை கருப்பாக்க தான் டை அடித்து பார்த்திருக்கோம். ஆனால் கருப்பா இருந்த முடிக்கு டை அடிச்சு இப்படி வெள்ளையாக்கிட்டிங்களே என கலாய்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











