இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா... வெளியேறுவதிலும் கடுமையாக போட்டி போடும் அந்த 3 பேர்

சென்னை : பிக்பாஸில் டிக்கெட் டு ஃபினாலேவை வெல்ல போவது யார் என்பதை கடந்து, இந்த வாரம் வெளியேற போவது யார் என்பதில் அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது. இந்த வாரம் அதற்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம்.

Recommended Video

#BiggBoss5 டைட்டிலை கைப்பற்ற எல்லோரும் நடிக்கிறாங்க… போட்டுடைத்த போட்டியாளர்கள்!

இந்த வாரம் போட்டியாளர்கள் இடையே நடந்த அடிதடி, மோதலுக்கு பிறகு யார் வெளியேறுவார்கள் என்பதை கணிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. இந்த வாரம் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளதும் இதற்கு முக்கிய காரணம்.

ஃபைனலுக்கு செல்லும் முதல் நபர்

ஃபைனலுக்கு செல்லும் முதல் நபர்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. டிக்கெட் டு ஃபினாலேவை பெற சிபி, அமீர், சஞ்சீவ் ஆகியோர் போட்டி போடுகிறார்கள். இவர்களில் ஃபினாலே டிக்கெட்டை வெல்ல போவது யார் என்பது இன்று நடத்தப்படும் டாஸ்கின் முடிவில் தெரிந்து விடும். நேரடியாகவும் முதலாவதாகவும் இறுதிப் போட்டிக்கு செல்லப் போகும் அந்த நபர் யார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

வெளியேற போவது யார்

வெளியேற போவது யார்

அதே சமயம் இந்த வாரம் பிரியங்கா, தாமரை சண்டைக்கு பிறகு வெளியேற போவது யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் குறைவான ஓட்டுக்களை பெற்றதால் வருண் மற்றும் அக்ஷரா வெளியேற்றப்பட்டனர். அதிக போட்டியாளர்கள் இருப்பதால் டபுள் எவிக்ஷன் மூலம் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

டபுள் எவிக்ஷன் தானா

டபுள் எவிக்ஷன் தானா

கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே இனி டபுள் எவிக்ஷன் தான் என சொல்லி விட்டார் கமலே. கடந்த வாரம் எவிக்ஷனை அறிவிப்பதற்கு முன், ஹின்ட் கொடுப்பதை போல் இரண்டு பேராக உட்கார வைத்து கேள்வி கேட்டார் கமல். அதே போல் இந்த வாரம் எவிக்ஷனுக்கு ஹின்ட் கொடுப்பதை போல் டாஸ்கில் இருந்து இரண்டு பேராக வெளியேற்றி வருகிறார் பிக்பாஸ்.

யாருக்கு அதிக ஓட்டு

யாருக்கு அதிக ஓட்டு

இதனால் நிகழ்ச்சியின் 13 வது வாரத்திலும் டபுள் எவிக்ஷன் இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. டிசம்பர் 29 ம் தேதி நடத்தப்பட்ட Unofficial voting அடிப்படையில் வெளியேற்றுபவர்கள் பட்டியலில் 3 பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறதாம். அதிகமான ஓட்டுக்கள் பெற்று பிரியங்கா மற்றும் ராஜு முதல் இடத்தில் இருக்கிறார்களாம். ராஜு 23 சதவீதம் ஓட்டுக்களுடன் முதலிடத்திலும், 21 சதவீதம் ஓட்டுக்களுடன் பிரியங்கா இரண்டாவது இடத்திலும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெளியேற்ற பட்டியலில் 3 பேர்

வெளியேற்ற பட்டியலில் 3 பேர்

முதலில் குறைவான ஓட்டுக்களுடன் சிபி தான் கடைசி இடத்தில் உள்ளதால் கூறப்பட்டது. ஆனால் நேற்றைய ஆன்லைன் ஓட்டுப்பதிவு அடிப்படையில் நிரூப், தாமரை, சஞ்சீவ் ஆகியோர் தலா 7 சதவீதம் ஓட்டுக்களுடன் சமநிலையில் உள்ளனராம். இவர்களைத் தொடர்ந்து 8 சதவீதம் ஓட்டுக்களுடன் அமீர் உள்ளாராம். இந்த வார டாஸ்கில் இறுதி வரை ராஜுவுக்கு டஃப் கொடுத்து விளையாடியதால் பாவனிக்கு ஆதரவு பெறுகி உள்ளதாம். ஆனால் தாமரை, பிரியங்கா சண்டையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார டிஆர்பி கூடி உள்ளது. இதனால் தாமரை வெளியேற குறைவான வாய்ப்புக்களே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரே மேடையில் இரு அறிவிப்பு

ஒரே மேடையில் இரு அறிவிப்பு

இந்த வாரம் 3 பேர் ஒரே அளவில் ஓட்டுக்களை பெற்றுள்ளதால் எந்த இரண்டு பேர் வெளியேற போகிறார்கள் என கணிக்க முடியாமல் உள்ளது. தாமரை- நிரூப் அல்லது நிரூப் - சஞ்சீவ் அல்லது தாமரை - சஞ்சீவ் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வெளியேற போகிறவர்கள், இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்ல போகிறவர் ஆகிய இரண்டையும் இந்த வாரம் கமல் சொல்ல உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X