பிக்பாஸ் 5 தமிழ் கிராண்ட் ஃபினாலே... வெளியான லேட்டஸ்ட் அப்டேட்...குழப்பத்தில் ரசிகர்கள்

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்படும் நிகழ்ச்சியாக உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நான்கு சீசன்கள் முடிந்து தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 13th January 2022 - Promo 2 | Eramana Rojave 2 & Senthoora Poove Serial Team Mass Entry

18 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் அமீர், நிரூப், பிரியங்கா, ராஜு, பாவனி ஆகிய ஐந்து பேர் இறுதிப் போடிக்கு சென்றுள்ளனர். சிபி, ரூ.12 லட்சத்துடன் வெளியேறி சென்றார். தற்போது நடைபெற்று வரும் ஃபினாலே வாரத்தில், வெளியேறி சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

ஃபினாலே நடக்குமா

ஃபினாலே நடக்குமா

106 நாட்கள் கொண்ட இந்த நிகழ்ச்சியின் ஃபைனல் என்றைக்கு நடத்தப்படுகிறது என அறிவிக்கப்படாமல் இருந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் ஃபினாலே நடத்தப்படுமா, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்நிலையில் ஃபினாலே நடத்தப்படும் தேதி, நேரம் போன்றவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஃபினாலே எப்போது தெரியுமா

ஃபினாலே எப்போது தெரியுமா

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலே ஜனவரி 16ம் தேதி மாலை 6.30 மணிக்கு துவங்கி, நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் மாட்டுப் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக வழக்கம் போல் மாலை துவங்கி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி, அப்படி நடத்தப்பட போவதில்லையாம்.

 அட...இதெல்லாம் இருக்கா

அட...இதெல்லாம் இருக்கா

முந்தைய சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசனின் ஃபினாலே நேரடி ஒளிபரப்பாக இல்லாமல், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாம். ஃபினாலே நிகழ்ச்சிக்கான ஷுட்டிங் இன்று காலை 9 மணிக்கு துவங்கி நடத்தப்பட உள்ளதாம். இதற்கு முன்பாகவே மற்ற பரிசு வழங்குவது உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான ஷுட்டிங் நடத்தப்பட்டுள்ளதாம்.

சஸ்பென்ஸ் வைக்கிறாங்க

சஸ்பென்ஸ் வைக்கிறாங்க

இந்த ஃபினாலே நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள், டைட்டில் வின்னர் யார், பிரியங்கா உடல்நிலை சரியில்லாததால் அவர் பங்கேற்பாரா என்பது போன்ற விஷயங்கள் உறுதியாகாமல் இருந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X