Don't Miss!
- News
பாஜகனா அட்வைஸ் தரலாமா? சிடி ரவிக்கு எச்சரிக்கை விடுத்த அதிமுக நிர்வாகி.. ட்விட்டரில் கிளம்பிய மோதல்
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மீண்டும் பவானி பின்னால் சுற்றும் அமீர்.. கொஞ்சம் கூட திருந்தல... இறுதி வாரத்தில் நடப்பது என்ன?
சென்னை : பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தவர் நடன இயக்குனர் அமீர்.
ஆரம்பத்தில் அவ்வளவு பிரபலமாகாத இவர் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமாகியுள்ளார்.
அமீரும், பாவனியும் பேசும் ரொமான்ஸ் பேச்சை கேட்டு கடுப்பாகிப்போன நெட்டிசன்ஸ் தாறுமாறான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சில நாட்கள் ஒழுங்காக இருந்த அமீர் கடைசி வாரத்தில் கட்டிவைத்திருந்த வாலை அவிழ்ந்து விட்டு மீண்டும் பாவனியின் பின்னால் சுற்றுகிறார்.

வந்ததுமே ரொமான்ஸ்
பிக் பாஸ் வீட்டில் அபிநய் மற்றும் பாவனி காதல் விவகாரம் உச்சத்தில் இருந்த போது வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்தார் அமீர். வந்ததும் வராததுமாக பாவனியை அடிப்பது, கிள்ளுவதுமாக இருந்து விமர்சனத்திற்கு உள்ளானார். இதனால் அபிநய்யின் வெறுப்பையும் தேடிக்கொண்டார்.

குறும்படம்
அபிநய் மற்றும் பாவனியின் காதல் விஸ்வரூபமாகி வீட்டிற்குள் பிரச்சினை வெடித்த போது கமல் தலையிட்டு குறும்படத்தை போட்டுக்காட்டி பாவனியின் முகத்திரையை கிழித்தார். நீங்கள் மாறி மாறி இருப்பது தான் பிரச்சினை, அவர் உங்களிடம் பேசுவது பிடிக்கவில்லை என்றால் நேரடியாக சொல்லி இருக்கலாம் என்று கூறி அபிநய் மற்றும் பாவனிக்கு தக்க அறிவுரை கூறினார்.

காதலிக்கிறேன்
குறும்படத்தைப் பார்த்து கடுப்பான அபிநய் மொத்தமாக பாவனியிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட அமீர், அவரிடம் நெருங்கிப்பழகி ஒரு கட்டத்தில் காதலிப்பதாகவே கூறிவிட்டார். பாவனி நீ தம்பிடா என்று கூறியும் அவர் பின்னால் சுற்றுவதை அமீர் நிறுத்தவில்லை.

பாவனிக்கு முத்தம்
பாவனிக்கு ரூட் போடுவதையே வேலையாக கொண்டிருந்த அமீர், அவருக்கு முத்தத்தையும் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்தார். இதனால் இணையத்தில் அமீர் குறித்து பல நெகட்டிவ் கருத்துக்கள் இணையத்தில் பரவின. பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த அமீரின் குடும்பத்தினர் முத்த விவகாரம் குறித்து கண்டித்தனர். அதேபோல கமலும் விளையாட்டில் கவனம் செலுத்துங்கள் என்று மறைமுகமாக அறிவுரை கூறினார். இதையடுத்து, பவானியின் பக்கம் செல்லாமல் ஒபன் நாமினேஷனில் பாவனியை நாமினேட் செய்து நல்லவன் வேஷம் போட்டார்.
Recommended Video

கொஞ்சம் கூட திருந்தல
பிக்பாஸ் வீட்டில் தற்போது கடைசி வாரத்தில் இவர்கள் இருவரும் அடிக்கும் லூட்டி தாக்கமுடியவில்லை, எப்போதும் ஜோடியாக கையை பிடித்துக்கொண்டு உலாவதும், கொஞ்சி கொஞ்சி பேசுவதும், கட்டிப்பிடித்து ஐ லவ் யூ சொல்லுவதும் பார்ப்பதற்கு கடுப்பாகவே இருக்கிறது. அமீர் கொஞ்சம் கூட திருந்தல என்பதையே இது காட்டுகிறது. இறுதிவாரத்திற்கு வந்துவிட்டோம் என்ற எண்ணத்தில் அமீர் இருக்கிறார். அமீர் பாவனியின் பின்னால் சுற்றுவதாலே அவருக்கு குறைவான வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. தற்போது அமீர் 5வது இடத்தில் இருக்கிறார்.