பிக்பாஸ் 5 டிக்கெட் டு ஃபினாலே... வெல்ல போகும் அந்த ஒருவர் யார் ? எப்போது தெரியும் ?

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 பரபரப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இறுதிப் போட்டிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், நேரடியாக இறுதி போட்டிக்கு செல்வதற்கான டிக்கெட் டு ஃபினாலேவை வெல்லும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

தற்போதுள்ள 8 போட்டியாளர்களில் முதல் நாளில் நிரூப், இரண்டாவது நாளில் தாமரை மற்றும் பாவனி, மூன்றாவது நாளில் பிரியங்கா மற்றும் ராஜு வெளியிட்டனர். தற்போது அமீர், சிபி, சஞ்சீவ் ஆகியோர் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளனர்.

டிக்கெட் டு ஃபினாலே எதற்கு

டிக்கெட் டு ஃபினாலே எதற்கு

டிக்கெட் டு ஃபினாலே என்பது இறுதிப் போட்டிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்வதற்கான வாய்ப்பை கொடுப்பது. இந்த டிக்கெட்டை வெல்பவரே முதல் ஆளாக இறுதிப் போட்டிக்கு செல்வார். ஆனால் இதற்கான போட்டிகள் மிக கடுமையாக இருக்கும்.

மாற்றப்படுமா இந்த முறை

மாற்றப்படுமா இந்த முறை

டிக்கெட் டு ஃபினாலேவை வெல்ல போட்டியிடுபவர்களில் சிபி, ஆரம்பம் முதலே இருப்பவர். ஆனால் அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக 50 நாட்களுக்கு பிறகு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவர்கள். வைல்ட் கார்டு என்ட்ரியில் வந்தவர்கள் இறுதிப் போட்டிக்கு செல்வது மிக அரிதானதே. இருந்தாலும் இந்த முறை அது மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சமநிலையில் 3 பேர்

சமநிலையில் 3 பேர்

இனி நடத்தப்படும் டாஸ்க்குகள் உடல் வலிமையை சோதிப்பதாக இருக்கும் என்பதால் மூன்று பேருக்கு அதில் சமநிலையில் உள்ளனர். முட்டையை உடை, பலூனை உடை என்பது போன்று சின்ன பிள்ளைதனமான டாஸ்க்குகள் வேண்டாம். டாஸ்க்கை கடினமாக்குங்கள் என ரசிகர்களே கேட்டு வருவதால் ஃபிசிக்கல் டாஸ்க் மட்டுமே நடத்தப்பட வாய்ப்புள்ளது.

எப்போது தெரியும்

எப்போது தெரியும்

முதல் நாள் டாஸ்கில் மட்டும் தான் நிரூப் ஒருவர் மட்டும் வெளியேற்றப்பட்டார். அதற்கு பிறகு நடத்தப்பட்ட இரண்டு டாஸ்க்குகளிலும் இரண்டு, இரண்டு பேராக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அதனால் இன்று நடத்தப்படும் அடுத்தகட்ட டாஸ்கிலும் இரண்டு பேர் வெளியேற்றப்பட்டு, இன்றே ஃபினாலே டிக்கெட் வென்று இறுதிப் போட்டிக்கு செல்லும் அந்த ஒருவர் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படலாம்.

சஸ்பென்ஸ் தொடருமா

சஸ்பென்ஸ் தொடருமா

அல்லது சுவாரஸ்யத்தை கூட்டி, சஸ்பென்சை அதிகரிக்க செய்வதற்காக இன்று ஒருவர் மட்டும் வெளியேற்றப்படலாம். மீதமுள்ள இரண்டு பேருக்கு நாளை மற்றொரு டாஸ்க் கொடுக்கப்பட்டு, அதில் வெற்றி பெறுபவருக்கு ஃபினாலே டிக்கெட் வழங்கப்படலாம். அமீர் அல்லது சிபி இதனை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 30th December 2021 - Promo 1 | யாரு Bigg Boss 5-ன் முதல் Finalist??
மக்கள் எதிர்பார்ப்பு என்ன

மக்கள் எதிர்பார்ப்பு என்ன

இதில் மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் டிக்கெட் டு ஃபினாலேவை வெல்பவர்கள் யாரும் இதுவரை டைட்டிலை வென்றது கிடையாது. அதனால் இந்த டிக்கெட் வெல்பவர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்றே சொல்லப்படுகிறது. இருந்தாலும் 13 வது வாரத்தில் நடத்தப்பட்டு வரும் டாஸ்க்குகள், மோதல்கள் சுவாரஸ்யத்தை அதிகரிக்க செய்துள்ளதாக மக்கள் கூறி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X