ஷிவினை ட்ரெஸ் மாற்றவிடாமல் அட்ராசிட்டி… எல்லை மீறிய அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர்

சென்னை: கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 33 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா ஆகியோர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், இந்த வாரம் எவிக்சன் யார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், இன்றைய டாஸ்க்கில் அமுதவாணனும் ராபர்ட் மாஸ்டரும் ஷிவினிடம் எல்லை மீறி நடந்துகொண்டது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பிக் பாஸ் 33வது நாள்

பிக் பாஸ் 33வது நாள்

விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா ஆகியோர் வெளியேறிவிட்டனர். இதனையடுத்து இந்த வாரம் எந்த போட்டியாளர் வெளியேறப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதில், வழக்கம்போல் அசீம், தனலட்சுமி இருவரும் இடம்பிடித்துள்ளனர். மேலும், ஷிவின் தலைக்கு மேலும் எவிக்சன் என்னும் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஷிவினுக்கு தண்டனை

ஷிவினுக்கு தண்டனை

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஃபேக்டரி டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் விக்ரமன், தனலட்சுமி தலைமையில் இரண்டு அணிகளாக போட்டியிட்டனர். இந்நிலையில், டாஸ்க்கில் சரியாக விளையாடத காரணத்துக்காக ஷிவினுக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதன்படி கடந்த வாரம் டிஆர்பி டாஸ்க்கில் கிழவி வேடம் போட்ட ஷிவின், அதே வேடத்தில் பிக் பாஸ் வீட்டில் நடமாட வேண்டும் என பிக் பாஸ் உத்தரவிட்டார். இதனையடுத்து ரச்சிதா, அமுதவாணன் இருவரும் 'டில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்ல தட்டாதே' என்ற மனோரமாவின் பாடலை பாடி ஷிவினை கிண்டல் செய்தனர்.

எல்லை மீறிய அமுதவாணன், மாஸ்டர்

எல்லை மீறிய அமுதவாணன், மாஸ்டர்

இந்நிலையில், தண்டனையை ஏற்றுக்கொண்ட ஷிவின், கிழவி போன்று உடை மாற்றுவதற்காக ட்ரெஸ்ஸிங் ரூம் சென்றார். அவரை விடாமல் பின்தொடர்ந்த ராபர்ட் மாஸ்டரும் அமுதவாணனும் இதயம் படத்தில் வரும் 'ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி' தான் என்ற பாடலைப் பாடி கிண்டல் செய்தனர். ஒருகட்டத்தில் ஷிவின் ட்ரெஸ்ஸிங் ரூம் சென்ற பிறகும் கூட, ஸ்கீரினை விலக்கிய ராபர்ட் மாஸ்டரும் அமுதவாணனும் அவரை தொந்தரவு செய்தனர். மேலும், தொடர்ந்து அங்கேயே நின்றுகொண்டு ஷிவினை ட்ரெஸ் மாற்ற விடாமல் அட்ராசிட்டி செய்தனர்.

கண்டிக்காத பிக் பாஸ்

கண்டிக்காத பிக் பாஸ்

சில நேரங்களுக்குப் பிறகு அமுதவாணனும் ராபர்ட் மாஸ்டரும் அங்கிருந்து கிளம்பினர். அதன்பின்னரே ஷிவின் ட்ரெஸ் சேன்ஞ் பண்ண சென்றார். ஆனால், இதையெல்லாம் சக போட்டியாளர்களும் கேட்கவில்லை, பிக் பாஸும் கண்டிக்கவில்லை. இந்த வீடியோவை ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள், ராபர்ட் மாஸ்டரும் அமுதவாணனும் எல்லை மீறி நடப்பதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். பெண் போட்டியாளர்களிடம் கொஞ்டம் அட்வான்டேஸ் எடுத்ததால் தான் அசல் கோளாறு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X