மகேஷ்வரி அப்படி சொல்லுவாங்கனு நினைக்கல.. மனதிற்குள் ஜாலியா இருந்தது.. விஜே கதிரவன் பேட்டி!

சென்னை : பிக் பாஸ் மூலம் பிரபலமான விஜே கதிரவன், மகேஷ்வரி அப்படி சொன்ன போது செம ஜாலியா இருந்தது என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் விஜே கதிரவன். தனது இயல்பான குணத்தாலும், க்யூட்டான சிரிப்பாலும் பல பெண்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார் கதிர்.

பலமுறை நாமினேஷனில் சிக்கிய போதும், பல பெண் ரசிகைகள் வாக்களித்து இவரை காப்பாற்றினார்கள்.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அண்மையில் நிறைவடைந்தது. இதில் அசீம் டைட்டிலையும், 50லட்சம் ரூபாய் பரிசையும் வென்றார். இரண்டாவது இடம் விக்ரமனுக்கும், மூன்றாவது ஷிவின் கணேஷனும் பெற்றனர். அசீம் சக போட்டியாளர்களிடம் வரம்பு மீறி நடந்து கொண்டதால் அவர் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என பலர் நினைத்த நிலையில் அசீம் வெற்றி பெற்று பலரை அதிர்ச்சி அடையச் செய்தார். இதனால், இணையத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக பல கருத்துகள் குவிந்தன.

விஜே கதிரவன்

விஜே கதிரவன்

இந்த நிகழ்ச்சி குறித்து பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த பல போட்டியாளர்கள் பேட்டி அளித்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 3 லட்சம் ரூபாய் பண மூட்டையுடன் வெளியேறிய விஜே கதிரவன், பிக் பாஸ் நிகழ்ச்சியின் பரபரப்பு அடங்கிய பின் நிறுத்தி நிதானமாக, யூடியூப் சேனல் ஒன்றுக்கு, பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

என் இயல்பான குணம் அது

என் இயல்பான குணம் அது

அதில், ஆரம்பத்தில் நான் அமைதியாக இருந்ததை பார்த்த பல போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக நடிக்கிறார் என்றனர். ஆனால், உண்மையிலேயே என் இயல்பான குணமே அதுதான். நான் விஜேவாக இருந்தாலும், கேமரா முன் அதிகமாக பேசுவேன். ஆனால், அந்த சீன் கட்டானதும் நான் நானாக இருப்பேன்.

கோவம் பிரச்சனைக்கு தீர்வாகாது

கோவம் பிரச்சனைக்கு தீர்வாகாது

அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த 100 நாட்களில் நான் இரண்டு அல்லது மூன்று முறை மட்டும்தான் கோவப்பட்டு இருப்பேன். கோவம் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு ஆகாது. அமைதியா பல விஷயங்களை யோசிக்கும் போதுதான் பல விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும் அதைத்தான் அந்த வீட்டில் நான் செய்தேன்.

ஜாலியாக இருந்தது

ஜாலியாக இருந்தது

பெண்கள் அனைவரும் என்னை கிரஷ் என்று சொல்வதை கேட்கும் போது, பெருமையாக இருக்கிறது. அதே போல, மகேஷ்வரி என் மீது கிரஷ் என்று சொன்ன தருணத்தில் மனதிற்குள் ஜாலியாக இருந்தது, அவங்க அப்படி சொல்லுவாங்கனு என்று நான் நினைக்கல, என பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த பல சுவாரசியமான கேள்விக்கு அழகாக க்யூட்டாக பதில் அளித்தார் கதிர். இந்த நேர்காணலை பல ரசிகைகள் போட்டி போட்டு வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X