Don't Miss!
- Lifestyle
திருமணத்திற்கு முன் நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களாக சாணக்கியர் கூறுவது என்ன தெரியுமா?
- News
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை? அண்ணாமலை சூசசகம்
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Technology
Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
விக்ரமா...அசீமா டைட்டில் வின்னர் யார்?...பிரம்மாண்டமாக தொடங்கியது பிக் பாஸ் கிராண்ட் பினாலே!
சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் யார் டைட்டிலை வெல்லுவார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அவலுடன் உள்ளனர்.
அக்டோபர் மாதம் 9ந் தேதி ஜி.பி.முத்து, அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின், சாந்தி, அஸீம், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ரச்சித்தா, ராம் ராமசாமி, ஏடிகே, விஜே மகேஸ்வரி, அமுதவாணன், விஜே கதிரவன், குயின்ஸி, நிவாசினி, தனலட்சுமி, விக்ரமன்,மைனா என 21 போட்டியாளர்களுடன் தொடங்கியது.
இதில் ஜிபி முத்து தாமாக வெளியேறிய நிலையில் 17 போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆனார்கள். தற்போது பிக் பாஸ் வீட்டில் விக்ரமன்,அசீம்,ஷிவின் இருக்கிறார்கள்.
பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீம் தானா..? லீக்கான போட்டோ உண்மையா அல்லது எடிட்டட் வெர்ஷனா?

பிக் பாஸ் சீசன் 6
20917ம் ஆண்டு பிக் பாஸ் சீசன்1 தமிழில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருப்பதால் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்துள்ளது. 5 சீசனுக்கும் கிடைத்த வரவேற்பால் ஆறாவது சீசன் புதுபுது டாஸ்குகளுடன் பரபரப்பாக ஒளிபரப்பானது. எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் அரசியல் பிரமுகரான விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் கலந்து கொண்டார்.

விக்ரமா...அசீமா
விக்ரமா...அசீமா இதில் யார் டைட்டிலை வெல்லுவார் என்பதை தெரிந்து பிக் பாஸ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல அரசியல் பிரமுகர்களும் ஆர்வமாக உள்ளனர். விக்ரமனுக்கு விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் ட்விட்டரில் வாக்களிக்கும்படி கேட்டிருந்தார். இது பலவிதமான சலசலப்புகளை உருவாக்கியது. விக்ரமன் அரசியல்வாதியாக இருந்தாலும், எந்த இடத்திலும் அதை வெளிப்படுத்தியது இல்லை. அப்போதும் அங்கு நடக்கும் பிரச்சனைகளுக்கு முதல் ஆளாக குரல் கொடுத்துள்ளார்.

செண்டை மேளம் முழங்க
இந்நிலையில், பிக் பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவில் மேலதாளம், செண்டை மேளம் முழங்க கதகளி ஆட்டத்துடன் பினாலே தொடங்கி உள்ளது. மேலதாளம் வாத்தியத்தை கமல் உற்சாகமாக ரசித்து பார்க்கிறார். மற்ற போட்டியாளர் கை தட்டி, விசில் அடித்தும் ஆட்டம் போட்டுள்ளனர். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு செம எஞ்சாய்மென்ட் என நிகழ்ச்சியை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

நாயகன் வரான்.... கமல் மாஸ் என்ட்ரி
முன்னதாக காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், நாயகன் வரான் என்று விக்ரம் படத்தின் பாடலின் பிஜிஎம்முடன் கமல் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். பல கோடி ரசிகர்கள், பல லட்சம் வாக்குகள், ஒரே வெற்றியாளர்... The biggest entertainment show bigg boss season 6 grand finale என்று கூறி நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டி உள்ளார்.