டேஞ்சர் ஜோனில் இருக்கும் நால்வர்: இந்த வாரம் இவர் வெளியேறுவது கன்பார்ம்!

சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 7வது வாரத்தை எட்டி உள்ள நிலையில், இந்த வாரம் நால்வர் டேஞ்சர் ஜோனில் இருக்கிறார்கள்.

இந்த வாரம் நடந்த ஓபன் நாமினேஷனில் அசீம், மணிகண்டன், அமுதவாணன், கதிரவன், ராம், ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி என ஏழு பேர் லிஸ்டில் இருக்கிறார்கள்.

யாரும் எதிர்பார்க்காத வகையில், ரச்சித்தா மகாலட்சுமி , ராபர்ட் மாஸ்டரை நாமினேட் செய்தார்.

சண்டை மற்றும் சச்சரவு

சண்டை மற்றும் சச்சரவு

பிக் பாஸ் வீடு சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு போட்டியாளர்களும் தன்னுடைய இருப்பை காட்ட வேண்டும் என்பதற்காக தேவையே இல்லாத விஷயத்திற்கு சண்டை போட்டு வருகின்றனர். இதனால், பிக் பாஸ் பிரியர்கள் எரிச்சல் அடைந்தாலும், நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகின்றன.

தனி ரசிகர் கூட்டம்

தனி ரசிகர் கூட்டம்

இந்த சீசனின் வலுவான போட்டியாளரே அசீம் தான், என்னத்தான் இவர் சக போட்டியாளர்களிடம் வார்த்தையை விட்டு வரம்பு மீறி பேசினாலும், இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவாகி உள்ளதை மறுக்க முடியாது. முதல் வாரத்தில் ரெட் கார்டு கொடுத்து இவரை வெளியில் அனுப்ப வேண்டும் என்று போர்க்கொடி தூக்கிய ரசிகர்கள், இப்போது ஆசீமை ஆண்களின் தலைவன் என்று கொண்டாடி வருகின்றனர்.

அசீமுக்கு பெரும் ஆதரவு

அசீமுக்கு பெரும் ஆதரவு

ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களின் ஆதரவும் அசீமிக்கு கிடைத்துள்ளது. அவர் மட்டும் தான் போலி முகத்துடன் இல்லாமல், யாரை பற்றியும் கவலைப்படாமல் விளையாட்டில் கவனம் செலுத்தி விளையாடி வருகிறார் என்று அசீமை புகழ்ந்து வருகின்றனர்.

வழக்கறிஞராக அசத்தினார்

வழக்கறிஞராக அசத்தினார்

நேற்று பிக் பாஸ் வீட்டில் நடந்த நீதிமன்ற டாஸ்கில், அமுதவாணன் ஜனனியை அம்பாக பயன்படுத்தவில்லை என்ற வழக்கை எடுத்து வாதாடினார். இது டாஸ்கா இருந்தாலும், அசீம் ஒரு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் என்னென்ன காரணத்தை குறிப்பிட்டு சொல்வாரோ அப்படி வாதாடினார். இது உண்மையில் ரசிக்கும்படி இருந்தது. இதனால், அசீமுக்கு கணிசமான வாக்கு அதிகரித்துள்ளது.

அசீமுக்கு அதிக வாக்கு

அசீமுக்கு அதிக வாக்கு

பிக் பாஸ் போட்டியாளர்கள் எத்தனை முறை அசீமை நாமினேஷன் செய்தாலும், முந்திக்கொண்டு முதல் நபராக அவரே காப்பாற்றப்படுகிறார். கடந்த வாரம் அசீம் அதிக வாக்குகளை பெற்ற போதும், கமல் வேண்டும் என்றே அசீமை கடைசியாக காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார். இந்த வாரம் அதிக வாக்குகள் பெற்ற போட்டியாளராக அசீம் இருக்கிறார்.

இவர் வெளியேறுவார்?

இவர் வெளியேறுவார்?

இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் ராம், ராபர்ட் மாஸ்டர், மணிகண்டன் அமுதவாணன் ஆகியோர் இருக்கிறார்கள். இதில் மிகக்குறைத்த வாக்குகளை ராம் பெற்று இருப்பதால் அவர் இந்த வாரம் வெளியேறுவது கன்பார்ம் ஆகி உள்ளது. பிக் பாஸ் வீட்டின் மிக்ஸர் அங்கிள் ராம் இத்தனை நாள் இருந்ததே பெரிய விஷயம் என ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X