பிக்பாஸ், விஜய் டிவி முக்கிய சீரியல்கள் நேரம் மாற்றம்...ரசிகர்கள் வருத்தம்
சென்னை : உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் டிவி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்ட விழாவுடன் துவங்க உள்ளது. வழக்கம் போல் இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்குகிறார்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய் டிவி வெளியிட்ட வித்தியாசமான ப்ரோமோக்கள், நிகழ்ச்சியை எப்போது துவக்குவார்கள், யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்ற ஆர்வத்தை பல மடங்கு அதிகரிக்க வைத்துள்ளது. போட்டியாளர்கள் பற்றி வெளியாகும் தகவல்களும் ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறது.

நேரமும் மாற்றம்
முந்தைய நான்கு சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசனுக்காக பிக் பாஸ் லோகோ மாற்றப்பட்டுள்ளது. போட்டியாளர்களுக்கான விதிகளும் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்ல இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரமும் மாற்றப்பட்டுள்ளதாம். அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பிரபலமான பல சீரியல்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளதாம்.

பிக்பாஸ் நேரமும் மாற்றம்
பிக்பாஸ் சீசன் 5 துவக்க நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 11 மணி வரை நடைபெற உள்ளது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி தினமும் இரவு 9.30 மணிக்கு துவங்கி 10.30 மணி வரை நடைபெறும். வார இறுதியில் கமல் வரும் எபிசோட்கள் மட்டும் 9.30 மணிக்கு துவங்கி 11 மணி வரை நடைபெறும். ஆனால் இந்த சீசன் இரவு 10 மணிக்கு துவங்கி, 11 மணி வரை ஒளிபரப்பாகுமாம். கமல் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோட் 10 மணிக்கு துவங்கி 11.30 வரை ஒளிபரப்பாகுமாம்.

எந்தெந்த சீரியல் நேரம் மாறுது
பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக வரும் அக்டோபர் 4 ம் தேதி முதல் தேன்மொழி பிஏ பகல் 3.30 மணிக்கும், நாம் இருவர் நமக்கு இருவர் மாலை 6.30 மணிக்கும், மெளன ராகம் 2 இரவு 7 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளன. செந்தூரப்பூவே சீரியல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதெல்லாம் மாற்றமில்லை
அதே சமயம் பிரைம் டைம்மில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்யலட்சுமி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 ஆகிய டாப் ரேட்டிங் சீரியல்கள் வழக்கமான நேரத்திலேயே ஒளிபரப்பாக உள்ளன. அதிகமானவர்களால் விரும்பி பார்க்கப்படும் இந்த சீரியல்களின் நேரத்தை மாற்றினால் அது டிஆர்பி.,யை அதிகம் பாதிக்கும் என்பதால், சீரியல்களின் நேரத்தில் மாற்றம் செய்யாமல், பிக்பாஸ் நிகழ்ச்சி நேரத்தை அரை மணிநேரம் தாமதமாக மாற்றி உள்ளனர்.

ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்
ஆனால் பிக்பாஸ் நேரம் மாற்றப்பட்டதற்கு ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தென்றல் வந்து என்னை தொடும், நம்ம வீட்டு பொண்ணு போன்ற சீரியல்களின் நேரத்தை மாற்றினால் நன்றாக இருக்கும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் பிக்பாஸ் நேரத்தை மாற்றியதற்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்யலட்சுமி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 சீரியல்களின் நேரத்தை அரைமணி நேரம் முன்னதாக மாற்ற வேண்டியது தானே என கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











