Don't Miss!
- Automobiles
போறபோக்க பாத்தா மாருதி, டாடா எல்லாம் நம்ம ஆளு பின்னாடிதான் நிக்கணும் போலிருக்கே! தொடர் வெற்றியில் மஹிந்திரா!
- Finance
Budget 2023: இது தேர்தல் பட்ஜெட் அல்ல.. ஒரு சமநிலையான பட்ஜெட்.. இலவசங்கள் கிடையாது..!
- News
ரூ.5800 கோடி..மதுரவாயல் - துறைமுகம் டபுள் டக்கர் சாலை..மத்திய சுற்றுசூழல் நிபுணர் குழு அனுமதி
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Technology
காத்திருந்தது தப்பே இல்ல.! அறிமுகமானது Samsung Galaxy S23.. விலை என்ன தெரியுமா?
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க பணத்தை கையாளுவதில் கில்லாடிகளாம்... இவங்களுக்கு எப்பவும் பணக்கஷ்டம் வராதாம்...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பணம் வந்ததும் ஆளே மாறிட்டாங்களே..பிக் பாஸ் ஆயிஷாவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
சென்னை : பிக் பாஸ் ஆயிஷாவின் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் வாய் பிளந்து லைக்குகளை மலை போல் குவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் நடிகை ஆயிஷா. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா என்ற சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
அந்த சீரியலில் பாய்ஸ் ஹேர் கட்டுடன், ஜூன் ஷர்ட் அணிந்து ரௌடி பேபியாக வலம் வந்தார். இந்த சீரியலில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர்களின் ரொமான்ஸ் ரசிகர்களுக்கு பிடித்துப்போனதால், ஆயிஷா இல்லத்தரசிகளின் செல்லப்பிள்ளையானார்.

கோவப்பட்ட ஆயிஷா
இந்த சீரியலில் மூலம் கிடைத்த வரவேற்பால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிஷா சிறப்பாக விளையாடினார். வந்த முதல் வாரத்திலேயே ரெங்கிங் டாஸ்கின் போது, அசீம் வாடி, போடி என்று பேசியதால், கோபட்டு ஆத்திரத்தில் கத்தினார். ஒரு கட்டத்தில், பெருமையை இழந்த ஆயிஷா, காலில் இருந்த நெருப்பை கழட்டி வீசினார்.

ஆணவமாக பேசினார்.
மேலும், பொம்மை டாஸ்கில் உடல்நிலை சரியில்லாததால் கலந்து கொள்ளவில்லை என்று கூறிவிட்டு பின், ரச்சித்தாவை அவுட்டாகியது பற்றி கமல் கேட்ட போது, சார் நான் வேண்டுமென்றே ரச்சிதாவை அவுட் ஆக்கியது போல போர்ட்ரே பண்ண வேண்டாம் கமல் முன்னாடியே ஆணவப் பேச்சு பேசினார். இதற்கு கமல் எனக்கு போர்ட்ரேலாம் பண்ணத் தெரியாது என சிரித்துக் கொண்டே கூறிவிட்டார்.இதனால், கமலின் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஆயிஷாவை வறுத்தெடுத்தனர்.

முன்னாள் காதல் குற்றச்சாட்டு
அதேபோல, ஆயிஷாவின் முன்னாள் காதலன் இவரை பற்றி சமூக வலைதளத்தில் பல வீடியோக்களை வெளியிட்டும், அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும், ஆயிஷா கழுத்தில் இருக்கும் செயின் குறித்து பல விஷயங்களை பொதுவெளியில் பேசினார். இது ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆயிஷாவின் சம்பளம்
பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் தடுமாறிய ஆயிஷா அதன்பின் விளையாட்டை புரிந்து கொண்டு விளையாடினார். ஆனால், 8 வது வாரத்தில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். பிக் பாஸ் வீட்டில் ஆயிஷாவுக்கு நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதன்படி மொத்தம் 12.50 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளதாக தெரிகிறது.

பணம் வந்ததும் ஆளே மாறிட்டாங்களே
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆயிஷா, ஸ்லீவ்லஸ் ஜாக்கெட்டில் விதவிதமான போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவில் ஆயிஷா முன்பைவிட ரொம்ப அழகாக இருக்கிறார். இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள், பணம் வந்ததும் ஆளே மாறிட்டாங்களே என்று கேட்டு வருகின்றனர்.