For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இவரு வேடிக்கை பாக்குறத தவிர வேற எதுக்குமே சரிபட்டு வரமாட்டார்… கதிரை விளாசும் பிக் பாஸ் ரசிகர்கள்

  |

  சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மூன்று வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், இந்த வாரம் யார் எவிக்ட் ஆகப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் கதிர் எப்போதுமே எந்த பிரச்சினைகளிலும் தலையிடாமல் இருப்பதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

  விக்ரம் படத்தில் அந்த ’பாம்’ சீன் எப்படி பண்ணாங்க தெரியுமா? பிக் பாஸ் வீட்டில் ஓப்பன் பண்ண மைனா! விக்ரம் படத்தில் அந்த ’பாம்’ சீன் எப்படி பண்ணாங்க தெரியுமா? பிக் பாஸ் வீட்டில் ஓப்பன் பண்ண மைனா!

  3வது வாரத்தில் பிக் பாஸ்

  3வது வாரத்தில் பிக் பாஸ்

  பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த மாதம் 9ம் தேதி முதல் தொடங்கியது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், மைனா நந்தினியும் இணைந்துள்ளார். அதேநேரம், இதுவரை மொத்தம் 3 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டனர். ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு ஆகியோர் வெளியேறியதில் இருந்து, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் டைட்டிலை வெல்லும் முனைப்போடு ஆடி வருகின்றனர். அசீம், தனலட்சுமி, ஆயிஷா, மகேஷ்வரி, ஜனனி, விக்ரமன், அமுதவாணன் ஆகியோர் ஒவ்வொரு வாரமும் லைம் லட்டில் வந்துவிடுகின்றனர்.

  அமைதிப்படை கதிர்

  அமைதிப்படை கதிர்

  பிக் பாஸ் சீசன் 6ல் முதல் வாரத்தில் இருந்தே கவனம் ஈர்த்து வருபவர் கதிர். முதல் இரண்டு வாரங்களில் எவிக்ஷன் நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்து தப்பிய கதிர், இந்த வாரம் சக போட்டியாளர்களால் டார்க்கெட் செய்யப்பட்டுள்ளார். அதிகம் சர்ச்சைகளில் சிக்காமல் இருந்த போதும், கதிர் எப்போதும் அமைதிப்படையாகவே இருப்பது மற்ற போட்டியாளர்களை யோசிக்க வைத்துள்ளது. யாரிடமும் எந்த பிரச்சினையும் செய்யாமல் எப்பவுமே Safe ஆக இருந்துவிட்டால் போதும் என்று நினைத்து கதிர் கேம் ஆடுகிறார் என சென்ற வாரமே புகார்கள் எழுந்துவிட்டன.

  இதெல்லாம் நியாயமா?

  இதெல்லாம் நியாயமா?

  முக்கியமாக இரண்டாவது வாரத்தில் நடந்த பொம்மை டாஸ்க்கில் நிலைமை படுமோசமானது. அசீம், ஆயிஷா, ஷெரினா ஒரு டீமாகவும், அமுதவாணன், ஜனனி, தனலட்சுமி, ஷிவின் இன்னொரு பிரிவாகவும் மோதிக் கொண்டனர். இவர்கள் நடுவில் விக்ரமன், மகேஷ்வரி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோரும் என்ட்ரியாகி பெரிய கலவரமே நடந்தது. ஆனால், இது எல்லாவற்றையும் கதிர் ஒரு ஓரமாக அமர்ந்து வேடிக்கை மட்டுமே பார்த்து வந்தார். இதை கடந்த வாரம் அகம் டிவி வழியே பேசிய கமல்ஹாசனே கதிரிடம் சுட்டிக் காட்டி கொஞ்சம் சாஃப்ட்டாக கண்டனம் தெரிவித்தார்.

  நெட்டிசன்கள் கேள்வி

  நெட்டிசன்கள் கேள்வி

  ஆனாலும், கதிர் இன்னும் மாறவில்லை என்பதை கடந்த மூன்று தினங்களாக பார்க்க முடிகிறது. இந்த வாரம் எவிக்‌ஷன் நாமினேஷன் லிஸ்ட்டில் கதிரையும் கோர்த்துவிட்டனர் சக போட்டியாளர்கள். அப்படி இருந்தும் கடந்த இருநாட்களாக நடக்கும் டாஸ்க்கில் அசீம் - தனலட்சுமி, அசீம் - மகேஷ்வரி, ராபர்ட் மாஸ்டர் - தனலட்சுமி ஆகியோரிடையே மோதல்கள் ஏற்பட்டன. அதேபோல், அந்த டிவி, இந்த டிவி டாஸ்க்கிலும் விக்ரமன் - மகேஷ்வரி, விக்ரமன் - மைனா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், இது எதற்கும் தனது பக்கம் நியாயம் என்ன, எது சரி எது தவறு என எதையுமே சொல்லாமல் யாரையும் சமாதானமும் செய்யாமல் அமைதி காக்கிறார் கதிர். இதனால், அவர் மீது இப்போது பிக் பாஸ் ரசிகர்களுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த வாரம் கதிர் தான் வீட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.

  English summary
  Bigg Boss has been airing on Vijay TV for 3 weeks now. Fans have criticized that Kathir, who has participated in this, is quiet without interfering in any issues.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X