»   »  திடீர் என்று தற்கொலைக்கு முயன்ற பிக் பாஸ் போட்டியாளர்: மருத்துவமனையில் அனுமதி

திடீர் என்று தற்கொலைக்கு முயன்ற பிக் பாஸ் போட்டியாளர்: மருத்துவமனையில் அனுமதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கெட்ட வார்த்தை பேசியதற்கு தன்னை சல்மான் கான் திட்டியதால் இந்தி பிக் பாஸ் போட்டியாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசன் நடந்து வருகிறது. இந்த சீசனிலும் சல்மான் கான் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சியில் 12 சாதாரண ஆட்கள், 6 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

சல்மான் கான்

சல்மான் கான்

பிக் பாஸ் வீட்டில் இருந்த ஜுபைர் கான் கெட்ட வார்த்தை பேசினார். இதை பார்த்த சல்மான் கான் ஜுபைரை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிவிட்டார். சல்மான் இப்படி திட்டுவார் என்று ஜுபைர் எதிர்பார்க்கவில்லை.

ஜுபைர்

ஜுபைர்

பல பேர் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சல்மான் தன்னை திட்டியதை தாங்க முடியாமல் ஜுபைர் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

வெளியேற்றம்

வெளியேற்றம்

தற்கொலைக்கு முயன்ற ஜுபைரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜுபைர் வெளியேற்றப்படுவதாக சல்மான் அறிவித்தார்.

போலீஸ்

போலீஸ்

பிக் பாஸ் வீட்டில் தன்னை திட்டி மிரட்டியதாக சல்மான் கான் மீது மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார் ஜுபைர். ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்ததை விட நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

English summary
Bigg Boss 11 contestant Zubair Khan consumed pills after the host Salman Khan scolded him for using foul language.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil