For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அது எப்படி பிக் பாஸ்.. எல்லாரும் சரியா பதில் சொல்றாங்க.. கன்ஃபெஷன் ரூமிலும் தில்லு முல்லா?

  |

  சென்னை: கண்ணீர் அறையாக மாறி இருந்த கன்ஃபெஷன் ரூம், இப்போதான் காமெடி ரூமாக மாறி உள்ளது.

  கேள்விக்கென்ன பதில் டாஸ்க்கில் பிக் பாஸ் கேட்கும் கேள்விக்கு யாரெல்லாம் சரியா பதில் சொல்றாங்களோ அவங்களுக்கெல்லாம் கிஃப்ட் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டது.

  பிக் பாஸ் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் போட்டியாளர்கள் சரியான பதில் கூறியதை பார்த்த நெட்டிசன்கள் இன்னாம்மா ஏமாத்துறாங்க என ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

  நாக்கு தள்ளிடுச்சு.. கடும் போட்டி.. ரியோ, சோமை வீழ்த்தி வின் பண்ண ஆரி.. அடுத்த வார தலைவர் இவர்தான்!

  ஒரே போர்

  ஒரே போர்

  பண்டிகை நாட்கள் வந்துவிட்டாலே போட்டியாளர்கள் ரொம்ப ஃபேக்காக சிரிப்பது போன்றும் வழிவது போன்றுமே இருக்கிறது. பாலாவும், அனிதா சம்பத்தும் அநியாயத்துக்கு நல்லவங்களாக நடிப்பதை எல்லாம் பார்க்க சகிக்கல ஒரே போர் என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  கன்ஃபெஷன் க்விஸ்

  கன்ஃபெஷன் க்விஸ்

  என் கேள்விக்கென்ன பதில் என்கிற டாஸ்க்கை இந்த முறை பிக் பாஸே போட்டியாளர்களிடம் தனித்தனியாக நடத்தினார். பிக் பாஸ் கேட்கும் கேள்விகளுக்கு சரியான விடை அளிக்கும் நபர்களுக்கு பரிசுகளை அள்ளிக் கொள்ளும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், எதுக்கு இந்த தேவையில்லாத ஆணி என்பது தான் புரியவில்லை.

  கடத்தேங்காயை எடுத்து

  கடத்தேங்காயை எடுத்து

  கடத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல, பிக் பாஸ் போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வழங்கப்பட்ட கிறிஸ்துமஸ் கிஃப்ட்டை என்னமோ தன் பாக்கெட்டில் இருந்து காசு போட்டு கிஃப்ட் கொடுப்பது போல, இத்தனை நொடிகள் தான் எடுக்க வேண்டும், அதற்கு ஒரு கேள்வி பதில் போட்டியென ரொம்பவே டார்ச்சர் பண்ணி விட்டார் பிக் பாஸ்.

  அடேங்கப்பா கேள்விகள்

  அடேங்கப்பா கேள்விகள்

  இந்த வீட்டில் எத்தனை வாட்டி பொங்கல் போட்டாங்க என ரம்யாவிடம் ஆரம்பித்து, பாத்ரூம் கண்ணாடியில் எத்தனை பல்பு இருக்கு என கேபியிடம் கேட்டு, கேப்டனாக இருந்து முதலில் யார் ஜெயிலுக்கு போனது என பாலா சொல்ல, சனம் ஷெட்டி, வேல்முருகன் வச்சிக்கவா பாடலுக்கு ஆடியது என ஏகப்பட்ட அடேங்கப்பா கேள்விகளை பிக் பாஸ் கேட்டார்.

  ஷிவானி எப்படி?

  ஷிவானி எப்படி?

  தான் எத்தனை பந்தை பிடித்தேன் என அடுத்த நொடி கேட்டதுமே தெரியாத ஷிவானிக்கு முதல் வாரத்தில் குக்கிங் டீமில் ரேகா, அனிதா, சுரேஷ், சனம் தான் இருந்தாங்க என்பது எப்படி தெரிந்தது என்பது தான் ரசிகர்களுக்கு ரொம்பவே டவுட்டை கிளப்பி இருக்கிறது. பதிலை சொல்லிவிட்டுத் தான் போட்டியாளர்களுக்கு சும்மா கேள்வி கேட்டு கலாய்த்தார் பிக் பாஸ் என்பது போலத்தான் கன்ஃபெஷன் ரூம் டாஸ்க் இருந்தது.

  அலைச்சல் அனிதா

  அலைச்சல் அனிதா

  பாலா அவர் கை இருக்கும் அகலத்துக்கு எத்தனை கிஃப்ட் பாக்ஸ் வேண்டுமென்றால் கூடத் தூக்கி வருவார். ஆனால், அதே அளவுக்கு தூக்கி வரவேண்டும் என அனிதா பண்ணதை பார்த்த நெட்டிசன்கள் அலைச்சல் அனிதா என இன்னொரு பெயரையே வைத்து விட்டனர். ஆனாலும், அவரது மன தைரியத்தை பாராட்டி ஆரிக்கு அவர் கொடுத்த துணி பிரஷ்ஷை கொடுத்தே ஆக வேண்டும். வீட்டுக்குப் போயாவது சமைக்க துவைக்க கத்துக்கோம்மா கன்னுக்குட்டி!

  English summary
  Housmates correctly answered for Bigg Boss questions at confession room and got several gifts from their family members.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X