Just In
- 53 min ago
பேய் அறைஞ்ச மாதிரியே இருக்கும் ரியோ.. ட்ரோல்களை கண்டு துவண்டு விடாதே என பாடம் நடத்திய கமல்!
- 1 hr ago
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- 2 hrs ago
பாராட்டு மழையில் நனைந்த மாஸ்டர் மகேந்திரன்... நீண்ட வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி!
- 2 hrs ago
இந்த பிக் பாஸ் சீசனை கெடுத்ததே இவங்கதான்.. அர்ச்சனாவை குற்றம்சாட்டும் நெட்டிசன்கள் ஏன்?
Don't Miss!
- News
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜன 20ல் பதவியேற்கும் ஜோ பிடன் - வெள்ளை மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அர்ச்சனாவை அழ வைக்க.. மிஸ்டர் லோக்கல் சீனை சுட்ட பிக் பாஸ்.. மகளை நினைத்ததும் கதறிவிட்டார்!
சென்னை: கன்ஃபெஷன் ரூமுக்கு வருபவர்கள் க்ளிசரின் போட்டுக்கிட்டு வாங்கன்னு சொல்லியிருப்பாரோ பிக் பாஸ் என்கிற சந்தேகம் எழுகிறது.
கொரோனா பரவல் காரணமாக ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்கு வந்து சந்திக்கும் வாய்ப்பு இம்முறை வழங்கப்படாது என்றே தெரிகிறது.
அதன் காரணமாக பிக் பாஸே கன்ஃபெஷன் அறைக்கு போட்டியாளர்களை தனித்தனியாக அழைத்து அவர்களது குடும்பத்தினர் பற்றி பேசி வருகிறார்.
சாரி சொல்லி கால்ல விழுந்துருவேன் பிக்பாஸ்.. கன்ஃபெஷன் ரூமில் கதறிய கண்ணுக்குட்டி!

கண்ணீர் தான் கான்செப்ட்
ஏற்கனவே அழுகாச்சி சீரியல்களை எல்லாம் ஓவர் டேக் செய்யும் அளவுக்கு ஏகப்பட்ட கண்ணீர் காட்சிகள் பிக் பாஸ் வீட்டில் கரைபுரண்டு ஓடி வரும் நிலையில், மீண்டும் கன்ஃபெஷன் ரூமில் இந்த வாரம் கண்ணீரை மையமாக வைத்து குடும்ப பாச டிராமாவை நடத்தி வருகிறார் பிக்பாஸ். கன்ஃபெஷன் ரூமுக்கு வருபவர்கள் க்ளிசரின் போட்டுக்கிட்டு வாங்கன்னு சொல்லியிருப்பாரோ பிக் பாஸ் என்கிற சந்தேகம் எழுகிறது.

பிக் பாஸிடம் பேசிய அர்ச்சனா
நேற்றைய எபிசோடில் பிக் பாஸ் அழைத்ததும் அனிதாவுக்கு அடுத்து கன்ஃபெஷன் ரூம் சென்ற அர்ச்சனா, ஆரம்பத்தில் அழாமல் நல்லா அழகாவே பேசிக் கொண்டிருந்தார். ஆனால், அர்ச்சனாவை எங்கே தொட்டால் அழ வைக்க முடியும் என்பதை நன்றாக அறிந்திருந்த பிக் பாஸ் அவரது மகள் பெயரை எடுத்து அழ வைத்து விட்டார்.

கேவி கேவி அழுத அர்ச்சனா
கன்ஃபெஷன் ரூமில் இதுவரை சுரேஷ் சக்கரவர்த்தி கேவி கேவி அழுதது பார்வையாளர்களை ரொம்பவே சோகத்தில் ஆழ்த்தியது. இந்த வாரம் ஷிவானி, ரியோ, அனிதாவை தொடர்ந்து அர்ச்சனாவையும் கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து அழ வைத்து வருகிறார் பிக்பாஸ். கேவி கேவி அர்ச்சனா அழுதாலும் ரசிகர்கள் அது எல்லாம் ஓவர் ஆக்டிங் என்கின்றனர். மகள் ஸாராவை பிரிந்து 73 நாட்கள் வாடும் அம்மாவின் நிஜ அழுகையாகவும் அவரது ரசிகர்கள் அதனை பார்த்தனர்.

மிஸ்டர் லோக்கல் சீன்
தைரியமாக பேசிக் கொண்டிருந்த அர்ச்சனாவை அழ வைக்க பிக் பாஸ் கையாண்ட அந்த யுக்தியை வைத்து சமூக வலைதளங்களில் சூப்பரான ட்ரோல்கள் பறந்து வருகின்றன. சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் கண்ணை மூடிக் கொண்டு நினைத்துப் பார்க்க சொல்லும் காட்சிகளை அப்படியே காப்பி அடித்து விட்டார் பிக் பாஸ் என்றும் அவரை கலாய்த்து வருகின்றனர்.

இப்போ ஏன்
கொரோனா பரவல் காரணமாக ஏகப்பட்ட விதிமுறைகள் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டும் கடைபிடிக்கப்படுகிறது. டிஜிட்டல் ரசிகர்களுடன் கமல் உரையாடுவது. பட புரமோஷனுக்காக எந்த படக்குழுவுக்கும் அனுமதி இல்லை. முன்னாள் போட்டியாளர்களும் டிஜிட்டல் வழியே தான் வந்து பேசினார்கள். இந்நிலையில், குடும்பத்தினர் வரும் ஃப்ரீஸ் டாஸ்க்கிற்கு பதிலாக இந்த குடும்ப விசாரிப்பு படலம் தற்போது நடந்து வருவதாகவே தெரிகிறது.