For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வட போச்சே.. நக்கட்ஸ் நக்கட்ஸ்ன்னு நாக்கை தொங்கப் போட்டு.. மொத்தத்துக்கும் வேட்டு வச்சிட்டாளே!

  |

  சென்னை: கடந்த 2 நாளா வெயிலிலும் மழையிலும், நடுநிசியிலும் தூங்காமல் கொள்ளாமல் பண்ண மணிக்கூண்டு டாஸ்க்கில் கிடைத்த லக்சரி பட்ஜெட்டை ஏதோ ஒரு அணி அதிகமாக எடுத்து முழுசா கோட்டை விட்டு விட்டது தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோவில் ரிவீல் ஆகி உள்ளது.

  பெண்டு நிமிர்த்த தொடங்கிய பிக் பாஸ் | Day 44 | மணிகூண்டு Task

  நக்கட்ஸ் நக்கட்ஸ்ன்னு நாக்கை தொங்கப் போட்டு மொத்தத்துக்கும் யாரோ ஒருத்தங்க வேட்டு வச்சிட்டாங்களே என நெட்டிசன்கள் வட போச்சே என கலாய்த்து வருகின்றனர்.

  நேற்றைய நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் குறைந்த நிலையில், இன்றைய நிகழ்ச்சி மறுபடியும் ஸ்பீடு ஏத்தும் என்பதையே புரமோக்கள் தெளிவுபடுத்துகின்றன

  யார் வின்னர்

  யார் வின்னர்

  ரியோ ராஜ், கேபி மற்றும் ஆரியின் டீம் தான் வெற்றி பெறும் என்று பார்த்தால், சத்தமே இல்லாமல், அர்ச்சனா, சம்யுக்தா, சோம் டீம் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் அதிக புள்ளிகளை பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் ஷிவானி, ஜித்தன் ரமேஷ், ஆஜீத் டீம் இருப்பது தான் ஆச்சர்யத்தின் உச்சமே!

  ஷிவானியை வெளுத்த ரம்யா

  ஷிவானியை வெளுத்த ரம்யா

  பாலாஜி முருகதாஸ் ஷிவானியை ஒரு பொருட்டாகவே மதிக்காத நிலையிலும், பாலா மாமா.. பாலா மாமான்னு அந்த பயில்வானை என்டர்டெயின் பண்ணவே ஷிவானி ஷோவுக்கு வந்திருக்கா என ரம்யா சம்யுக்தாவிடம் மூஞ்சால அடிச்சது மாதிரி சொல்லும் இரண்டாவது புரமோவுக்காகவே இன்றைய நிகழ்ச்சி களை கட்டும்.

  லாஸ்லியா அப்போ போல

  லாஸ்லியா அப்போ போல

  கடந்த சீசனில், கவினும் லாஸ்லியாவும் உருகி உருகி காதலித்தனர். கடைசியில், மறைந்த லாஸ்லியாவின் அப்பா மரியநேசன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து, காதல் எல்லாம் வேண்டாம் என மகளை கண்டித்தது போல, வெளியே ஷிவானிக்காக தினமும் இன்ஸ்டாவில் போட்டோ போட்டு ஓட்டு சேகரிக்கும் ஷிவானி அம்மா உள்ளே வந்து அட்வைஸ் பண்ணுவாங்களா? அல்லது வீடியோ காலில் திட்டுவாங்களான்னு வெயிட் பண்ணி பார்ப்போம்.

  இன்னொரு டாஸ்க்கா

  இன்னொரு டாஸ்க்கா

  ஏற்கனவே, கடந்த 2 நாளா வெயிலிலும் மழையிலும், நடுநிசியிலும் தூங்காமல் கொள்ளாமல் மணிக்கூண்டு டாஸ்க் விளையாடி போட்டியாளர்கள் சேர்த்த லக்சரி டாஸ்குக்கான புள்ளிகளை அவர்கள் பெற இன்னொரு டாஸ்க் கொடுப்பது போல, அணிகளாக பிரிந்து, பொருட்களை மரத்தில் இருந்து பறிக்கச் சொல்வதும், அதில் ஒரு அணிக்கு ஆப்பு வைக்கவும் என மூன்றாவது புரமோ வேற லெவல் வில்லங்கம்.

  நக்கட்ஸ்ன்னு நாக்கை தொங்கப்போட்டுக்கிட்டு

  நக்கட்ஸ்ன்னு நாக்கை தொங்கப்போட்டுக்கிட்டு

  ரியோ ராஜ், ஆரி மற்றும் கேபி இருக்கும் அணியா அல்லது ஜித்தன் ரமேஷ், ஷிவானி மற்றும் கேபியின் அணியா என்பது தெரியாத அளவுக்கு பிக் பாஸ் எடிட்டர் வேற மாறி ஆடியோ தனியாகவும், வீடியோ தனியாகவும் கட் பண்ணி உள்ளார். இருந்தாலும், நக்கட்ஸ் நக்கட்ஸ்ன்னு நாக்கு தொங்கப் போட்டுக்கிட்டு போன அணிக்குத் தான் அதிகமாக எடுத்த காரணத்தினால் ஜீரோவாகிறது பாயிண்ட்ஸ் என கணித்து வருகின்றனர்.

  வடபோச்சே

  வடபோச்சே

  இதைத்தான் கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை என்பார்கள். பாலாஜி முருகதாஸ் டீமுக்கு ஏற்கனவே பெருசா ஒன்றும் கிடைத்திருக்காது. ஆனால், இப்போ அவரே நமட்டுச் சிரிப்பு சிரிக்கும் அளவுக்கு இன்னொரு டீமுக்கு ஜீரோ பாயின்ட்ஸ் ஆகுதான்னு பார்க்க, பிக் பாஸ் ரசிகர்கள் ரொம்பவே வெயிட்டிங்!

  English summary
  Bigg Boss Day 46 promo 3 reveals one of the team gets zero points for over purchase the luxury budget products.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X