அசீம் – அமுதவாணன் சேர்ந்து நடத்திய மர்ம நாடகம்… தெறித்து ஓடிய பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

சென்னை: அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 53வது நாளை எட்டியுள்ளது.

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் ஏலியன்ஸ் - பழங்குடியின மக்கள் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ்க் தொடங்கிய நாள் முதல் பல்வேறு சண்டைகளோடும் சர்ச்சைகளோடும் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் அசீமும் அமுதவாணனும் இணைந்து நடத்திய மர்ம நாடகம் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை கலங்கடித்துள்ளது.

ஏலியன்ஸ் VS பழங்குடிகள்

ஏலியன்ஸ் VS பழங்குடிகள்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, இன்று 53வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டனர். அதனைத் தொடர்ந்து இந்த வாரம் ஏலியன்ஸ் - பழங்குடிகள் என்ற அவதார் கான்செப்ட்டில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், அசீம், விக்ரமன், ஷிவின், கதிர், மைனா, ஏடிகே பழங்குடியினர் என்ற அணியில் விளையாடி வருகின்றனர். மணிகண்டன், அமுதவாணன், தனலட்சுமி, குயின்ஸி, ரச்சிதா ஆகியோர் ஏலியன்ஸ்களாக களமிறங்கியுள்ளனர்.

பிக்பாஸ் 53வது நாள் ப்ரோமோ

பிக்பாஸ் 53வது நாள் ப்ரோமோ

இந்த டாஸ்க் தொடங்கிய நாள்முதலே, அசீம்க்கும் சக போட்டியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில், இன்று வெளியான முதல் ப்ரோமோவில் அமுதவாணனை அசீம் அடித்ததாக சர்ச்சை வெடித்தது. அமுதவாணனின் கழுத்தில் கையை வைத்துள்ள அசீம், அவரிடம் அடித்து பார் என வம்பிழுத்தார். அதேபோல், இரண்டாவதாக வெளியான ப்ரோமோவில் அசீம் அத்துமீறி நடந்ததற்கு ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கண்டனம் தெரிவிப்பதாக வெளியானது. இந்நிலையில், தற்போது இன்றைய தினத்துக்கான 3வது ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் மர்ம நாடகம்

பிக் பாஸ் வீட்டில் மர்ம நாடகம்

முதல் இரண்டு ப்ரோமோக்களிலும் அசீம் - அமுதவாணன் இடையேயான மோதல் உச்சத்தில் இருந்தது. ஆனால், மூன்றாவதாக வெளியான ப்ரோமோவில் அசீமும் அமுதவாணனும் இணைந்து நடத்திய மர்ம நாடகம் ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் தெறித்து ஓட வைத்துள்ளது. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் பேயிடம் பேசுவதை போல நடித்து எல்லோரையும் பயம் காட்டினார் அமுதவாணன். சென்ற வாரம் தூக்கத்தில் "ரத்தம் வேணும் ரத்தம் வேணும்" என அமுதவாணன் உளறியதில், அவர் பக்கத்தில் படுத்திருந்த மணிகண்டனே பயந்து நடுங்கினார்.

தனலட்சுமி தான் பாவம்

தனலட்சுமி தான் பாவம்

இந்நிலையில், இன்று களிமண்ணில் பொம்மை செய்து வைத்திருக்கும் அமுதவாணன், அதுக்கு ரத்தம் கொடுத்தால் ஒளித்து வைக்கப்பட்டுள்ள பூக்களை கண்டுபிடித்துவிடும் என ஹவுஸ்மேட்களிடம் கூறுகிறார். அம்முவின் திட்டத்தை புரிந்துகொண்டு அசீம் சில பூக்களை எடுத்து பாத்ரூமில் ஒளித்து வைப்பதோடு, அதனை அம்முவிடமும் ரகசியமாக சொல்லிவிடுகிறார். இது மற்றவர்களுக்கு தெரியாத நிலையில், அமுதவாணன் அந்த பொம்மையுடன் பாத்ரூம் சென்று, அங்கு ஒளித்து வைத்திருந்த பூக்களை எடுத்து வருகிறார். இதனை பார்த்த தனலட்சுமி அங்கிருந்து தெறித்து ஓட, மற்ற ஹவுஸ்மேட்ஸ்களும் பயந்து நடுங்குகின்றனர்.

என்னய்யா நடக்குது அங்க?

என்னய்யா நடக்குது அங்க?

ஏற்கனவே அசீம் போடும் சண்டையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் நிம்மதி இல்லாமல் இருக்கும் நிலையில், அமுதவாணனின் இந்த மர்ம நாடகம் இன்னும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வாரம் முழுவதும் விதிகளை மீறி விளையாடிய அசீம், நாமினேஷனில் இல்லை என்பதால், அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமா எனவும் போட்டியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X