பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றம்..முதல் வீடியோ வெளியிட்ட ஜி.பி.முத்து
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய ஜி.பி.முத்து முதன்முதலாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 6 முக்கிய நாயகர் ஜி.பி.முத்து கமல்ஹாசனே கேட்டுக்கொண்டும் முடியாது என மறுத்து வெளியேறினார்.
ஜி.முத்துவின் வீடியோ பிரபலம். அவர் வீட்டுக்குச் சென்றவுடன் முதல் வீடியோவை வெளியேற்றியுள்ளார்.

பிக்பாஸ் நாயகன், கமல் கேட்டும் மறுத்து வெளியேபோனவர்
பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி 15 நாட்கள் கடந்துள்ள நிலையில் அதன் முக்கிய நாயகராக இருந்த ஜி.பி.முத்து வீட்டுக்கு போகிறேன் என்று அடம்பிடித்து கமல்ஹாசனே சொல்லியும் கேட்காமல் கடைசியில் தான் நினைத்ததை சாதித்து வீட்டை விட்டு வெளியேறினார் பிக்பாஸ் வீட்டின் முக்கிய நாயகராக இருந்த ஜி.பி.முத்து. அவரால் பெரிய அளவில் பார்வையாளர்கள் பிக்பாஸை பார்க்க குவிந்தனர் ஆனாலும் தன் மகனை பிரிந்து இருக்க முடியவில்லை என்று பிடிவாதம் பிடித்து வெளியேறினார் ஜி.பி.முத்து.

ஆயிரக்கணக்கானோர் காத்திருக்க வாய்ப்பை நழுவ விட்ட ஜி.பி.முத்து
பிக் பாஸ் வீட்டில் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆயிரக்கணக்கானோர் வரிசை கட்டி காத்திருக்க சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்புகள் கிடைக்கிறது. அப்படி வாய்ப்பு கிடைக்கும் சிலரும் 100 நாளும் அந்த வீட்டுக்குள் எப்படியாவது இருந்து விட வேண்டும் என்பதற்காக சகல வித்தைகளையும் காட்டுவதை பார்க்கின்றோம். பிக் பாஸ் வீட்டில் வந்து புகழ்பெற்று திரை துறையிலும் இறங்கி சாதிப்பவர்கள் பலர் உண்டு. பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பின் தங்கள் வாழ்க்கையே மாறிவிட்டதாக சொல்பவர்கள் பலர் உண்டு. சிலருக்கு பிக்பாஸ் நெகட்டிவ் ஆக அமைந்துள்ளது, ஆனால் அந்த நெகட்டிவ் இமேஜும் அவர்களுடைய வருமானத்திற்கு வழி அமைத்துள்ளது ஆகவே பிக்பாஸ் வீட்டில் இருக்கவே அனைவரும் விரும்புவர்.ஆனால் அதை துச்சமாக உதறி விட்டு வெளியே சென்றார் ஜி.பி.முத்து.

பிக்பாஸின் அக்ரிமெண்ட்
பிக்பாஸ் விதியின்படி வீட்டை விட்டு வெளியேறியவர்கள் அல்லது பிக் பாஸ் சீசன் முடிந்த பின் வெளியேறுபவர்கள் பிக்பாஸ் வீடு குறித்தோ அல்லது அதை விமர்சித்தோ, அங்கு உள்ளே நடந்த விஷயங்கள் குறித்து வெளியில் பேட்டி, வீடியோ எதுவுமே பதிவு செய்ய கூடாது. ஊருக்கே அடங்காமல் தெரிந்த பல பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பின் வெளியில் சென்றாலும் இதுவரை பிக்பாஸ் பற்றி விமர்சித்து எந்த ஒரு பதிவும் போட்டதில்லை. காரணம் பிக்பாஸ் விதிகள் அவ்வளவு கடுமையாக இருக்கும். அவர்கள் உள்ளே வரும் பொழுது அக்ரிமெண்டில் பல சரத்துகளுடன் கையெழுத்து போட வேண்டி இருக்கும்.

ஒரே நிமிடத்தில் தூக்கி எரிந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முத்து
ஆனால் இவை அனைத்தையும் உதறி எரிந்துவிட்டு ஜிபி.முத்து வெளியே சென்று விட்டார். நீங்கள் இடையில் வெளியே செல்வதனால் பல விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று பிக்பாஸ் தெரிவிக்கும் எனக்து அதுபற்றி கவலை இல்லை என் மகனை பார்க்கணும் என்ற ஒரே வார்த்தையில் உறுதியாக நின்றார் ஜி.பி. முத்து. கடைசியில் நேற்று முன் தினம் வெளியேற அனுமதி கிடைத்து வெளியேறினார் ஜி.பி.முத்து. வீட்டுக்கு போன ஜி.பி.முத்து ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்த அவர் ஜி.பி.முத்து வீட்டில் இருந்து வெளியிட்டுள்ளார்.

சொந்த வீட்டிலிருந்து வீடியோ போட்ட ஜி.பி.முத்து
அந்த வீட்டில் இருந்து வெளியேறிய ஜி.பி.முத்து சொந்த வீட்டிலிருந்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் வீட்டில் தரையில் அமர்ந்துள்ளார். அவர் முன் அவரது இரண்டு மகன்கள், 2 மகள்கள் உட்கார்ந்திருக்கின்றனர். அவர்கள் முன் பிரியாணி பொட்டலம் உள்ளது. அவர் பார்க்கணும்னு அடம்பிடித்து வெளியேறிய மகன் விஷ்ணுவை அருகில் வைத்துக்கொண்டு மக்களே இதப்பாருங்க என் பய விஷ்ணு என பிரியாணியை ஊட்டுகிறார். என்ன பாக்காம ஏங்கி போய்ட்டான், ஏம்பா ஏங்கிப்போனாயா என்று மகன் விஷ்ணுவை பார்த்து கேட்கிறார். அப்புறம் அவரே ஆமா ரொம்ப ஏங்கிட்டான், மெலிஞ்சு போயிட்டான் என்று சொல்கிறார். அனைவருக்கும் பிரியாணி ஊட்டிவிட்டு மக்களே எனக்கு உடம்பு சரியில்ல படுக்கபோறேன்னு சொல்கிறார். முதல் வீடியோ என்றவுடன் எதையாவது பரபரப்பாக போட்டிருப்பார் என்று பார்த்தவர்களுக்கு சற்று ஏமாற்றம் தான்.


Click it and Unblock the Notifications











