For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  டைட்டில் தனக்கு கிடைக்கலைன்னா.. பிக் பாஸையே உழுது விட்ருவாறு உழுது.. அசீமை விளாசிய ஆர்த்தி!

  |

  சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நாளை ஒளிபரப்பாக உள்ளது. அதன் ஷூட்டிங் இன்றும் நாளை காலையும் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

  கடந்த சீசனை போலவே டைட்டில் வின்னர் யார் என்பது ஒரு நாள் முன்னதாக தெரிந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக பிக் பாஸ் குழு செயல்பட்டு வருகிறது.

  இந்நிலையில், பிக் பாஸ் ஃபைனலிஸ்ட்களான ஷிவின், விக்ரமன் மற்றும் அசீம் பற்றி முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான காமெடி நடிகை ஆர்த்தி பதிவிட்டுள்ள ட்வீட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

  ஜனவரி 22ம் தேதி துவங்கும் இந்தியன் 2 சூட்டிங்.. யாரெல்லாம் ஜாய்ன் ஆகறாங்க தெரியுமா? ஜனவரி 22ம் தேதி துவங்கும் இந்தியன் 2 சூட்டிங்.. யாரெல்லாம் ஜாய்ன் ஆகறாங்க தெரியுமா?

  கிராண்ட் ஃபினாலே

  கிராண்ட் ஃபினாலே

  பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பெரியளவில் பரபரப்பில்லாமல் சென்று கொண்டிருந்த நிலையில், கிராண்ட் ஃபினாலே அதுவுமாக பெரும் பரபரப்புடன் நிகழ்ச்சியை பலரும் கவனிக்க செய்து விட்டனர். விக்ரமனுக்கு திருமாவளவன் கொடுத்த சப்போர்ட்டுக்கு எதிராக பெரும் சர்ச்சைகள் வெடித்துள்ளன. அசீமின் மாமா நான் கிடையவே கிடையாது என ஆளுர் ஷா நவாஸ் நெற்றிப் பொட்டில் அடித்தது போல வீடியோ போட கிராண்ட் ஃபினாலே ஹைப் எகிறி உள்ளது.

  என்ன என்ன செய்யுறான் பாருங்க

  என்ன என்ன செய்யுறான் பாருங்க

  பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஹைப்பை எகிற வைக்க முதலில் பண மூட்டையை வைத்து கதிரை எடுத்துக் கொண்டு செல்ல வைத்து பின்னர் பணப்பெட்டியை வைத்து அமுதவாணனுக்கு 13 லட்சம் பரிசாக கொடுத்து பெரும் பரபரப்பை கிளப்பி ரசிகர்களின் கவனத்தை மீண்டும் பிக் பாஸ் நோக்கி திசை திருப்பி உள்ளனர்.

  மைனா அதிரடி வெளியேற்றம்

  மைனா அதிரடி வெளியேற்றம்

  இந்த கூத்துக்கள் மட்டுமின்றி மிட் வீக் எவிக்‌ஷன் என புதுசு புதுசா கொண்டு வந்து மைனாவை அதிரடியாக பெட்டியை தூக்கலைன்னாலும் நீ கிராண்ட் ஃபினாலேவுக்கு வேணாம்மா என விரட்டி அடித்து விட்டனர். மீதமுள்ள மூவரில் டைட்டில் யாருக்கு என்பது தான் ஒட்டுமொத்த ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பாக மாறி உள்ளது.

  ஆர்த்தி ஆதரவு

  ஆர்த்தி ஆதரவு

  விக்ரமன் அல்லது ஷிவின் இருவரில் யார் வெற்றிப் பெற்றாலும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வார்கள். ஷிவின் வெற்றி பெற்றால் அவரது சமூகத்திற்கே கிடைத்த பெருமையாக பார்ப்பார். விக்ரமனும் அதை மனதார ஏற்றுக் கொள்வார். விக்ரமன் வெற்றிப்பெற்றாலும் ஷிவின் சந்தோஷப்படுவார் என இருவருக்குமே முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் ஆர்த்தி ஆதரவு கொடுத்துள்ளார்.

  அசீமை விளாசி

  அசீமை விளாசி

  ஆனால், அசீம் வெற்றி பெறவில்லை என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியை உழுது விடுவார் உழுது என அவரது ஸ்டைலில் பஞ்ச் போட்டு அசீம் இந்த டைட்டிலை வெல்லக் கூடாது என ஆரத்தி ட்வீட் போட்டுள்ளார். சோஷியல் மீடியாவில் அசீம், விக்ரமன், ஷிவின் மூவருக்கும் இடையே ஆதரவு கருத்துக்களும் விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.

  உழுது விடுவார் உழுது

  உழுது விடுவார் உழுது

  "#ஷிவின் :எல்லாரிடமும் அமைதியா பண்பா பேசிப் பழகும் நன்னடத்தை கொண்டவர் #Vikraman அவரே ஜெய்கட்டும்னு சொல்லுவாங்க.. #விக்ரமன் : #ஷிவின் ஜெயிக்கிறதுனால அவங்க சமுதாயமே வெற்றியடையும்னு விட்டுக்கொடுத்துருவாரு

  #Azeem தனக்கு கிடைக்கலைன்னா #biggboss சையே உழுது விட்ருவாறு உழுது" என ட்வீட் போட்டு அசீமுக்கு எதிரான தனது எதிர்ப்பை நடிகை ஆர்த்தி வெளிப்படுத்தி உள்ளார்.

  அசீமுக்கு 3வது இடம்

  அசீமுக்கு 3வது இடம்

  விக்ரமன் மற்றும் ஷிவின் தான் முதல் இரு இடங்களை பிடிப்பார்கள் என்றும் அசீம் 3வது இடத்தில் வெளியேற்றப்படுவார் என ஜோ மைக்கேல் உள்ளிட்ட பிக் பாஸ் விமர்சகர்கள் கருத்து சொல்லி வருகின்றனர். இத்தனை எதிர்ப்புகளையும் மீறி அசீம் டைட்டிலை தட்டிச் செல்வார் என அவரது ரசிகர்கள் அசீமுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

  English summary
  Bigg Boss Ex Contestant Harathi slams Azeem and she told he wont accept others victory like Shivin or Vikraman. Harathi supports both Shivin and Vikraman to lift the Bigg Boss Season 6 Title trophy.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X