Just In
- 25 min ago
வேலன் டப்பிங் பணிகளை தொடங்கிய சூரி!
- 31 min ago
ஒயிட் பியூட்டி.. ஏஞ்சல் போல கடற்கரையில் செம ஆட்டம் போட்ட லாஸ்லியா.. வைரலாகும் போட்டோஸ்!
- 37 min ago
ஏய் இருங்கப்பா.. அட பொறுங்கய்யா.. தடியடி.. ஒரே குழப்பம்.. வருத்தத்தில் விஜய் டிவி புகழ்!
- 53 min ago
அய்யோ.. இன்னையோடு முடியப் போகுதா.. சோகத்தில் ரசிகர்கள்.. குக் வித் கோமாளி 2 கிராண்ட் ஃபினாலே!
Don't Miss!
- Sports
தடுமாறிய தருணம்.. ரோஹித் சொன்ன வார்த்தைகள் ; அதுதாங்க கேப்டன்சி மந்திரம்.. ராகுல் சாஹர் புகழாரம்
- Finance
1 பில்லியன் டாலர் கொடுத்துட்டு நகரு.. எவர்கிவன் கப்பலை சிறை பிடித்த சூயஸ் கால்வாய் நிர்வாகம்..!
- Automobiles
ஸ்கூட்டருக்கு இந்த கதி ஆகும்னு நினைச்சே பார்க்கல!! பொங்கி எழுந்த ஹோண்டா சிட்டி கார் ஓட்டுனர்
- News
மராட்டியத்தில் 144 தடை, திடீர் அச்சம்.. ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்.. ரயில்வே துறை கோரிக்கை
- Lifestyle
பிலவ வருடத்தில் இந்த 5 ராசிக்காரங்க நல்ல பலன்களைப் பெறப் போறாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா?
- Education
மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம்! தேர்வு கிடையாது! மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தாய்மையின் பூரிப்பில் பிக்பாஸ் சுஜா வருணி... டெலிவரிக்காக மருத்துவமனையில் அட்மிட்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பிரபலமான நடிகை சுஜாவருணி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது கணவர் சிவக்குமார் கூறியுள்ளார்.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று
கொண்டிருக்கிறது. இதில் முதல் சீனில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர் சுஜா வருணீ.

இவர் தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், இரண்டாவது கதாநாயகியாகவும், ஒரு பாடலுக்கு நடனமாடியும் உள்ளார். இதில் கிடாரி, பென்சில், மிளகா போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கன. சத்ரு படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், சிங்கக் குட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமான சிவாஜியின் பேரன் சிவாஜி தேவ் என்ற சிவக்குமாரை கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார்.
Nothing makes the earth a more beautiful place than a group of friends who brings out the best in you and holds your back
— Ganesh Venkatram (@talk2ganesh) August 4, 2019
The greatest gift of life is Friendship ❤️❤️ #HappyFriendshipDay pic.twitter.com/M8PCflVkvm
திருமணமான ஒரு சில மாதங்களில் சுஜா கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பதிவிட்டார். இதற்கு சிவக்குமார், நான் அப்பாவானது பெருமையாக இருக்கிறது. என் குழந்தைக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சுஜா வருணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, இதெல்லாம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதற்கு எந்தவொரு கேப்சனும் தேவையில்லை என்று நினைக்கிறேன். இது நான் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதை காட்டுகிறது. அன்பான கணவருடன் வாழும் போது எனது 12 வருட காதலை இப்பொழுது காண முடிந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

தன்னுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க கணேஷ் வெங்கட்ராம் குடும்பத்தினருடன் சுஜா வருணி குடும்பத்தினர் நட்பாக இருக்கின்றனர்.
ஆகஸ்ட் 4ஆம் தேதி நண்பர்கள் தினம் கொண்டாடி சுஜா வருணி குடும்பத்தினரும் கணேஷ் வெங்கட்ராம் குடும்பத்தினரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டனர். இந்த நிலையில் நிஷா கணேசிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சுஜா வருணியும் இப்போது பிரசவத்திற்காக மருத்தவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவரது கணவர் சிவக்குமார் தகவல் வெளியிட்டுள்ளார். தாயும் சேயும் நலமாக இருக்க கடவுளை பிராத்திப்போம். சுஜா வருணீ - சிவகுமார் இருவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.