Don't Miss!
- Finance
அய்யோ இது மட்டும் நடந்திட கூடாது.. இந்திய மக்கள் பீதி..!
- News
தேநீர் விருந்து.. தொலைபேசி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு.. திமுக முடிவு என்ன?
- Lifestyle
இந்த விஷயங்கள படுக்கையில் செய்வதன் மூலம் நீங்க வேற லெவலில் செக்ஸ் வாழ்க்கையை அனுபவிக்கலாமாம்!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Sports
அவர் டென்னிஸ் ஆடிட்டு இருக்காருங்க.. ஹர்திக் பாண்ட்யாவிடம் உள்ள ஸ்பெஷல் ஷாட்.. இர்ஃபான் புகழாரம்
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
அடக்கடவுளே.. துபாயில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பிக் பாஸ் பிரபலம்.. என்ன காரணம் தெரியுமா?
மும்பை: பிக் பாஸ் ஓடிடி பிரபலம் உர்ஃபி ஜவேத் அதிரடியாக துபாயில் கைது செய்யப்பட்டுள்ளது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
நான் என்ன டிரெஸ் போடுகிறேன் என்பது என் விருப்பம் என இந்தியாவில் பல இடங்களில் பத்திரிகையாளர்களுடன் சண்டை போட்டு வந்த உர்ஃபி ஜாவேத் அதே போல நினைத்துக் கொண்டு துபாயிலும் படு ஆபாச உடையுடன் வலம் வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது கைதுக்கான காரணங்கள் தான் ரொம்பவே ரசிகர்களை ஷாக் அடைய செய்துள்ளது.
டிஆர்பியில் அடி வாங்கிய பிக் பாஸ்... நெட்டிசன்கள் ட்ரோல்... எண்ட் கார்டு போட ரெடியான கமல்?

பிக் பாஸ் பிரபலம்
டிவி நடிகையான உர்ஃபி ஜாவேத் பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது போல்டான பேச்சாலும், உடையாலும் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தார். தற்போது சன்னி லியோனின் ஸ்ப்லிட்ஸ் வில்லா எனும் ரியாலிட்டி ஷோவில் நடித்து வரும் இவர் சோஷியல் மீடியாவில் எக்ஸ்ட்ரா கிளாமர் உடைகளுடன் வீடியோக்கள் வெளியிட்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

வித விதமான உள்ளாடை
வெறும் ஸ்மார்ட் போன்களை தொங்க விட்டப்படியும், இரு மார்பகங்களில் மட்டுமே சின்னதாக ஆடை அணிந்தும், டிரெஸ்ஸே போடாமல் ஒயின் கிளாஸ்களை கொண்டு முன்னழகை மறைத்தும் பல விதமான உள்ளாடைகளை அறிமுகப்படுத்தி வந்த உர்ஃபி ஜாவேத்தின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் கணக்கு இஷ்டத்துக்கு அதிகரித்து வருகின்றன.

சேத்தன் பகத் உடன் மோதல்
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எழுத்தாளர் சேத்தன் பகத் உர்ஃபி ஜாவேத் இந்திய இளைஞர்களை மனதளவில் கெடுத்து வருகிறார் என பேசியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்க நினைத்த உர்ஃபி ஜாவேத் மீடூ சமயத்தில் வெளியான சேத்தன் பகத்தின் வாட்ஸ்அப் லீலைகளை இன்னொரு முறை வெளியிட்டு அசிங்கப்படுத்தினார்.

துபாயில் கைது
உர்ஃபி ஜாவேத்துக்கு பெயர் பிரச்சனை காரணமாக பாஸ்போர்ட் வழங்குவதில் சிக்கல் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. உடனடியாக laryngitis எனப்படும் குரல்வளை அழற்சி நோய்க்காக சிகிச்சை எடுக்க துபாய் சென்ற இடத்தில் உர்ஃபி ஜாவேத்தை துபாய் போலீஸார் கைது செய்துள்ளனர்.

என்ன காரணம்
பிக் பாஸ் பிரபலம், டிவி நடிகை என இத்தனை பெரிய செலிபிரிட்டியான உர்ஃபி ஜாவேத்தை திடீரென துபாய் போலீஸ் கைது செய்வதற்கு என்ன காரணம் என விசாரித்தால், அவர் அணிந்திருந்த ஆடை மட்டும் பிரச்சனை இல்லையாம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தேவையில்லாமல் வெட்ட வெளியில் உடல் பாகங்கள் தெரியும் அளவுக்கு மோசமான உடையுடன் வீடியோ எடுத்தது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர்.